தமிழகம்

தேனியில் பொதுசுகாதாரத்துறையின் 100 வது ஆண்டை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்

46views
தேனியில், மாவட்ட விளையாட்டுத் திடலில், பொதுசுகாதாரத்துறையின் 100 வது ஆண்டை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன், 100 மீட்டர் விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்தார்.
பொது சுகாதாரத்துறை ஆரம்பிக்கப்பட்டு தற்போது 100-வது ஆண்டு நடைபெறுவதால், சுகாதாரத்துறை சார்பில் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில்,தேனி மாவட்ட விளையாட்டுத் திடலில் பொது சுகாதாரதுறை சார்பில் நூறாவது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் தலைமையேற்று, 100 மீட்டர் விளையாட்டு போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பொது சுகாதார துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, நிர்வாக அலுவலர் மணிசேகரன், நேர்முக உதவியாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த நிகழ்ச்சியை ஒட்டி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,பேட்மிட்டன், லக்கி கார்னர், இசைநாற்காலி போன்ற போட்டிகள் நடைபெற்றது.
இதில், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசும் சான்றுகளும் வழங்கப்பட உள்ளது.  இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்டத்தில் உள்ள வட்டார மருத்துவர்கள், வட்டார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: A. சாதிகபாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!