தமிழகம்

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

109views
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே  திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது.  கல்லூரி பிரார்த்தனை மற்றும் தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அகத்தர உறுதிமைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு வரவேற்புரை ஆற்றினார்.  கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார்.
கல்லூரிச்  செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக சாத்தூர் ஸ்ரீ ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ப.இராஜகுரு மற்றும் அக தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் இராஜேஷ்கண்ணா “தேசிய தர நிர்ணயக் குழுவின்அளவுகோல் வாரியான அணுகுமுறை” என்ற என்ற தலைப்பில்; சிறப்புரையாற்றினர். கல்லூரியின் அனைத்து பேராசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பாரதிராஜா நன்றியுரை வழங்கினார். வணிகவியல் உதவிப்பேராசிரியர் முனைவர் வடிவேல்ராஜா இந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!