தமிழகம்

கடையநல்லூர் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

160views
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட ஆணையிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் முதன் முதலாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆணையாளராக பணிபுரிந்து வரும் ரவிச்சந்திரன் பணி மாறுதல் ஆகி சென்னை தலைமைச் செயலகம் செல்வதை தொடர்ந்து அவரது சேவையை பாராட்டி அதை கௌரவிக்கும் வகையில் இந்த சமத்துவ பொங்கல் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரகுமான் தலைமையில் துணைத் தலைவர் ராசையா, பொறியாளர் லதா, சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் அலுவலர்கள் சித்ரா, செல்லம்மாள், ஜானகி, மகாலட்சுமி, சண்முக சுந்தரி, அலி பாத்திமா, முத்துமாரி, மலர்வழி வருவாய் உதவியாளர்கள் முருகம்மாள், மகேஸ்வரி வேல் தாய், தனலட்சுமி, கோமதி அலுவலக உதவியாளர்கள் மாரியம்மாள், மாலதி ஆகியோர் ஒரே போல் சீருடை அணிந்து பொங்கலுக்கு தேவையான கரும்பு, புதுப்பானை, அரிசி, வெல்லம், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு வந்தனர். வண்ண வண்ண கோலப்பொடிகளால் நகராட்சி அலுவலகம் அலங்கரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகர் மன்ற தலைவர் ஆணையர் மற்றும் இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, அலுவலக மேலாளர் சண்முகவேல், கணக்கர் துரை குமாரசாமி, கணினி திட்ட அலுவலர் செல்வகுமார், நகர அமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் மாடசாமி, அலுவலர்கள் மாரியப்பன், சாமித்துரை, ஸ்டீபன் சமுதாய அமைப்பாளர்கள் மனோகர், வீரபுத்திரன், இளவரசி, வருவாய் உதவியாளர்கள் பிரேம், யுவன் சங்கர் ராஜா மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் முருகன், ஆஞ்சநேயர் முருகன், ஓட்டுநர் நாகராஜன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ரேவதி, பாலீஸ்வரன், பூங்கோதை, கருப்பையாதாஸ், சுபா ராஜேந்திர பிரசாத், கண்ணன் என்ற பாலசுப்பிரமணியன், முருகன், மொய்தீன் கனி, சிட்டி திவான் மைதீன், மாலதி, வளர்மதி, பாத்திமா, மாரியம்மாள், வீரம்மா, வேல் சங்கரி, தங்கராஜ் ராமகிருஷ்ணன் மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு பொங்கல் சமத்துவ பொங்கல் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடினர்.

மேலும் நகராட்சி ஆணையரின் சேவையை பாராட்டி அவரை கௌரவிக்கும் விதமாக சமத்துவ பொங்கல் கொண்டாடி அவருக்கு நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான் சால்வை அணிவித்து பிரியா விடை கொடுத்தார். ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர், அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் தன்னுடைய பணி காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் ஆணையர் ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!