தமிழகம்

பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் மாமன்ற உறுப்பினர் மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரி கொசுக்கடி துர்நாற்றத்தில் இருந்து விடியல் கிடைக்காதா என தவிக்கும். 72 வது வார்டு மக்கள்

304views
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 வது வார்டு பைக்காரா அரசினர் காலணி குடியிருப்பு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை நீர் சாலையில் ஆறு போல வழிந்து ஓடுகிறது மேலும் இதில் மழை நீரும் சேர்ந்து கொண்டு பாதாள சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் அடைத்துக் கொண்டு உள்ளது.
 அப்பகுதி மாமன்ற உறுப்பினர் இடமும் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்த போது நான் அரசினர் காலனி பக்கம் ஓட்டு கேட்கவில்லை அதனால் பிரச்சனைக்கு தீர்வு செய்ய எனக்கு அவசியம் இல்லை எனவும் அலட்சியமாக கூறியுள்ளார் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மேலும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என மிகவும் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாற்று வைக்கின்றனர்.
பாதாள சாக்கடை நீர் சாலையில் செல்வதால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் மர்ம காய்ச்சலுக்கு மற்றும் நோய் தொற்று உண்டாகும்.  ஒரு உயிர் போவதற்குள்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.  நோய் தொற்றில் இருந்து விடியல் கிடைக்குமா என எதிர்பார்ப்புடன் 72 வது வார்டு பகுதி மக்கள்.
செய்தியாளர் : வி காள மேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!