தமிழகம்

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் தினம்

49views
இராமநாதபுரத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நிறுவனர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் ஜியோ சென்டரில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் வேளாண் அறிவியல் மையம் பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இளஞ்செழியன் நெல் மற்றும் கடலை சாகுபாடியில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடுகள் குறித்து விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். வேளாண் ஆலோசகர் திரு. ஸ்ரீதர் உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்தும், செல்வி.நூருல்கதிஜா சந்தைப்படுத்துதல் மற்றும் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோருக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம், சிவங்கை மாவட்ட பண்ணைப் பள்ளி (Digital Farm School) விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். ஏற்பாடுகளை மாவட்ட மேலாளர் ஸ்ரீகிருபா, களப்பணியாளர் இராமு, வீரபிரபாவதி, கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!