தமிழகம்

இராஜபாளையம் பழைய பேருந்து நிலைய மேம்படுத்துதல் பணி நடைபெற இருப்பதால் நாளை முதல் பயன்பாடு நிறுத்தம் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

83views
விருதுநகர் மாவட்டம்  இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தை ரூ.2.90 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி நடைபெற இருப்பதால் (18.01.2023) நாளை முதல் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படாது என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்காக ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு வணிக வளாகத்துடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி நாளை முதல் தொடங்க இருப்பதால், கட்டுமான பணிகள் நிறைவடையும் வரை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படாமல் போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்தும் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசு பேருந்து மேனேஜர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் செங்கோட்டை. தென்காசி மற்றும் திருநெல்வேலி பகுதியில் வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் சென்று இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வெளிப்புறம் மதுரை செல்லும் பயணிகள் ஏற்றி செல்லவும் அதேபோல் மதுரை தேனியில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் டிபி மில்ஸ் சாலை வழியாக ரயில் நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு ரயில்வே பீடர் சாலை வழியாக செல்லவும் சத்திரப்பட்டி பகுதியில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் செல்ல வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாளை முதல் பழைய பேருந்து நிலையத்தை மூடி விட்டு கட்டிட பணிகளை துவங்கி ஓராண்டுக்குள் முடிக்க படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!