தமிழகம்

இபிஎஸ் அம்மா நினைவு நாள் உறுதிமொழியில் நன்னாள் என கூறியது தவறல்லா. அன்று பிரதோசம். பாஜக கூட்டணி என பரப்பாக இருந்தார்.மேலும் எழுதி படிக்காமல் யதார்த்தமாக பேசியதை குற்றமாக கருத முடியாது. கோவை செல்வராஜ் திமுகவில் சேர்ந்தது ஓபிஎஸ் திமுக விடம் வைத்திருந்த தொடர்பை உறுதிப்படுத்திவிட்டார் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா சமாளிப்பு பேட்டி

31views
மதுரையில் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக வருகிற டிசம்பர் 9, 13, 14 ஆம் தேதி சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் உள்ளிட்ட அதிமுக புறநகர் மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து கூறிய போது.;-
தமிழகத்தில் மக்கள் விரோத அரசு தற்போது ஆண்டு கொண்டிருக்கிறது. மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் போராட வேண்டிய நிலை உள்ளது.
மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி மதுரையில் வருகிற 9, 13, 14ஆம் தேதிகளில் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற ஒன்பதாம் தேதி வெள்ளாளப்பட்டி பேரூராட்சியில் போரட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது,
தொடர்ந்து வேலூர் நகராட்சியிலும், மதுரை மாநகர் பகுதி என சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறோம்.
ஓபிஎஸ் தொடர்ந்து நீதிமன்றத்தையே கையாண்டு வருகிறார் என்ற கேள்விக்கு
மக்கள், கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் இதனை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
ஓபிஎஸுடம் தொண்டர்களும் இல்லை, கட்சி நிர்வாகிகளும் இல்லை, கட்சியும் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் மூத்த வழக்கறிஞர் இவருக்காக வாதாட தயாராக இல்லை ஆகையால் தான் இந்த வழக்கு தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்கள்.
தோல்வி அடைவோம் என தெரிந்தும் எந்த வழக்கறிஞரும் வழக்கை வாதாட மாட்டார்கள் இதனால் தான் இலவச சட்ட மையத்தை நாட வேண்டிய பரிதாபமான நிலைக்கு ஓபிஎஸ் செல்லப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா நினைவு நாளில் நன்னாள் என எடப்பாடி கூறியதற்கு ஓபிஎஸ் டங்கு ஸ்லிப் ஆயிருக்கும் என கூறியது குறித்த கேள்விக்கு
மற்ற தலைவர்கள் போல எடப்பாடி பழனிச்சாமி எழுதி வைப்பதை பார்த்து படிக்கும் பழக்கம் இல்லை மனதில் பட்டதை படமாக கூறுபவர்.
உறுதிமொழி பத்திரத்தில் சில பிழை இருப்பதால் அந்த மாறுதலான வார்த்தைகள் வந்துள்ளது.
அவர் கூறியதை நாங்கள் நல்ல நோக்கத்தில் தான் பார்க்கிறோம் என்று ஐந்தாம் தேதி சிவனுக்கு உகந்த நாள் பிரதோஷம் என்பதால் நன்னாள் என கூறி இருக்கலாம், அல்லது அதிமுகவிற்கு சரியான தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என தேர்ந்தெடுத்து டெல்லிக்கு கூப்பிட்ட நன்னாள் எனவும் குறிப்பிடலாம் தவறான நோக்கத்தில் அதனை படிக்கவில்லை.
இன்றைக்கு இதனை விட மிக தவறான வார்த்தைகள் எல்லாம் இன்றைய முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.
பொதுக்குழுவில் நல்லது நடக்கும் என ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு.
ஓபிஎஸ் கூட்டப் போவது கண்காட்சியாக இருக்குமே தவிர பொதுக்கூட்டம் அல்ல அவரிடம் இருந்த ஒரே ஒரு பேச்சாளரும் திமுகவிடம் போய்விட்டார் அவர் ஓபிஎஸ் திமுகவினரிடையே இருந்த தொடர்பையும் உறுதிப்படுத்தி அதனை பயன்படுத்தி திமுகவிற்கு சென்றிருப்பார்.
டிடிவி தொடங்கியது போல் ஓபிஎஸ் உம் தனியாக கட்சி தொடங்கி விட்டுப் போயிட்டாள் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனை இல்லை. எங்களிடம் தான் கட்சியும் இன்னமும் உள்ளது குடியரசு தலைவரை அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து மதுரை மாநகராட்சி 95 வது வார்டு (திமுக)மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி எம் எல் ஏ ராஜன் செல்லப்பாவை சந்தித்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தார். இதனை MLA ராஜன் செல்லப்பா அடுத்த சட்டமன்ற தொகுதி நிதியில் சீரமைக்க உறுதியளித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!