தமிழகம்

அரசு உதவி பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற பெற்றோர், மாணவியர் காத்திருப்பு போராட்டம்

161views
ராமேஸ்வரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்றக்கோரி பெற்றோர், மாணவர்கள் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.  ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வி கற்பதில் மாணவியருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு உதவிபெறும் இப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதசுவாமி கோயில் துணை ஆணையர், அமைச்சர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை. இதை அடுத்து  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர். ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன் பள்ளி மாணவியருடன் பெற்றோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தை தொடர்ந்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பெற்றோர், மாணவியர் கோரிக்கையை  நடப்பு கல்வி ஆண்டிலேயே நிறைவேற்றி உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!