கவிதை

கவிதைகள் 2

61views
சிறார் கவிதை
செல்லக் குழந்தைகளே
சிரித்து மகிழுங்கள்
வெல்லத் தமிழில்
கற்றுத் தேறுங்கள்.
நல்ல செயல்களில்
சிந்தை செலுத்துங்கள்
நாடும் வீடும்
ஒன்றெனக் கொள்ளுங்கள்.
நாளைய உலகம்
நமதென எண்ணுங்கள்
இன்றைய பொழுதினைத்
தன்வயப் படுத்துங்கள்.
எங்கும் எதிலும்
நல்லதே காணுங்கள்
எப்போதும் வெற்றி
நம்ம கையிலே நம்புங்கள்.
அன்புடன்:
வீ.கோவிந்தசாமி,
திருச்சிராப்பள்ளி

நம் மேன்மை காட்ட வேண்டும்.

நான் உரைக்கும் செய்திகள்
நம் பெருமை பேச வேண்டும்
ஏடெழுதும் எழுத்துக்கள்
எம்புகழைக் கூறவேண்டும்.

அளப்பரிய உயிர்ச்சக்தி
அண்டவெளி கொண்டிருக்கும்
அவைகளை நம் ஐம்புலன்கள்
அப்படியே கொள்ள வேண்டும்.

கொண்டுவிட்ட கருத்துக்கள் குடி கொண்டால் நம் மனதில்
வடிவெடுக்கும் செயல் யாவும்
கொடிபிடித்து வென்றுவிடும்.

வெற்றிகண்ட நற்செயல்கள்
வீழ்ச்சிகளை வீழ்த்திவிடும்
பற்றிப் படரும் கொடி போல
சுற்றி நம் பாசம் வளர்க்கும்.
புதுப்புது தத்துவங்கள்
புறப்பட்டு வரச்செய்யும்
புறத்தையும் அகத்தையும்
புத்தெழுச்சி பெறச்செய்யும்.
சங்க கால நெறிகளோடு
சமகால சிந்தனையும்
சமுத்திர அலைகளாய்
சரசமாய் வந்து விழும்.
அக்கால காவியம்போல்
இக்கால படைத்திடவே
தற்காலச் சான்றோர்கள்
சங்கல்பம் எடுத்திடுவர்.
எப்படி இவை நடக்கும்?
எவர்வந்து சேர்த்திடுவர்?
நாம் தான் முயல வேண்டும்
நம் மேன்மை காட்ட வேண்டும்.

வீ.கோவிந்தசாமி,
திருச்சிராப்பள்ளி 20.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!