இளைஞர்கள் கடினமாக உழைத்தால் கிரிக்கெட் விளையாட்டில் பிரகாசிக்கலாம்,’ என இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கிரிக்கெட் அணி வேக பந்து வீரர் நடராஜன் பேசியபோது, "ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பிய போது, ஊர் மக்கள் திரண்டு அளித்த வரவேற்பை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, ஆஸ்திரேலியாவில்...
கோவை: பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி: 5வது கட்டமாக கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்து காட்டு கோவை. இந்த பயணத்திற்காக போடப்பட்ட கொடிகள் அகற்றப்பட்டு உள்ளது. கூடுதல் விளம்பரத்தை தந்துள்ளது. அதற்கு அமைச்சர்களுக்கும், உடன் இருந்து பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி....
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று உடல்நிலையை காரணமாகக் கூறி அரசியலில் ஈடுபடபோவதில்லை என்று அறிவித்திருந்த நிலையில், அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர் நடிகா் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கயிருந்தது, அவரது ரசிகா்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. கடந்த...
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி மருந்தை மாநில மக்கள் அனைவருக்கும் எந்த ஒரு செலவும் இன்றி இலவசமாக வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தங்கள் அரசு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுளதாவது: மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக...
அமெரிக்காவில் விரைவில் குடியுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். இதுகுறித்து அமெரிக்காவின் டென்வர் மாகாணத்தில் உள்ள வெலிங்டன் நகரில் அவர் பேசினார். பதவியேற்ற நூறாவது நாளுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தான் விளக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் ஆட்சிகாலத்தில் அமெரிக்காவில் குடியேற விரும்பியவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம்....
புதிய தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை பாரதிராஜா ஆரம்பித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக உலகமே செயல் அற்ற நிலையில் இருப்பது போலவே திரைத்துறையும் எந்த வேலையும் செய்யாமல் இருக்கின்றது. அதனால் தான் இந்த புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்துள்ளதாக பாரதிராஜா கூறியுள்ளார். மேலும் பட வேலைகளுக்காக பணம் போட்டவர்கள், இனி திரைத்துறையின் நிலை, நடிகர், நடிகைகளின் வாழ்க்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதே தவிர...