உங்க வீட்டில் இதை ரெகமெண்ட் செய்யுங்க: கூடுதல் வட்டி தரும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்
60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) பொருத்தமான நிலையான வருமான முதலீட்டு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற பிறகும் நிலையான வருமானத்தை ஈட்ட முடியும். எஸ்சிஎஸ்எஸ் என்பது தபால் நிலையத்தால் வழங்கப்படும் மற்ற சிறிய சேமிப்பு திட்டங்களைப் போலவே அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டமாக இருப்பதால், இது காலாண்டு உறுதிப்படுத்தப்பட்ட வருமானத்தை வழங்குகிறது. எஸ்சிஎஸ்எஸ் கணக்கைத்...