மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்' என்ற தலைப்பில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ள விவரம்: அனைவருக்கும் அன்பான வணக்கம்! ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன்...