கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய கொள்கைகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகளின் அடிப்படையில் வாட்ஸ்அப் யூசர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் இடம்பெற்றிருந்தது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், மக்கள் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக புதிய பயன்பாடுகளை அணுகத் தொடங்கினர். இருப்பினும், நிறுவனம் தனது கொள்கை விதிகளை மாற்ற முன் வரவில்லை....
கோலாலம்பூரில் நடைபெற இருந்த ,மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது . மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, வருகின்ற 25 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற திட்டமிடப்பட்டது . தற்போது அங்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ,இந்த போட்டியை ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்தது .இந்த போட்டி தேதி குறிப்பிடாமல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது .இந்தப் போட்டியில் பங்கு பெற்று, தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம்...
ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா நிகழ்த்திய சாதனைகளை மற்றொரு நாடு நிகழ்த்த இனியொரு யுகம் வேண்டும் என்றே சொல்லலாம். ஒலிம்பிக் ஹாக்கியில் அரை நூற்றாண்டு இந்தியா கொடி கட்டிப் பறந்திருக்கிறது. 1928-ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தொடங்கி 1980-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி வரை 52 ஆண்டுகள் ஹாக்கி விளையாட்டியில் பெருசக்தியாக ஜொலித்திருக்கிறது இந்தியா. இந்த காலகட்டத்தில் 8 தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறது இந்திய...
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மர்மநபர்களால் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து நியூயார்க் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 2 அல்லது 3க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சினையை...
சீனா விண்ணில் ஏவிய ராக்கெட்டின் 18 டன் எடையுள்ள மிகப் பெரிய பாகம் இன்று இந்திய பெருங்கடலில் மாலத்தீவு அருகே விழுந்ததாக அந்த நாடு அறிவித்துள்ளது. விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22 டன் எடை கொண்ட லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட் மூலம் விணகலத்தை விண்வெளிக்கு சீனா அனுப்பியது. இந்த விண்கலத்தை சுமந்து...
மிசோரத்தின் லுங்லேய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நில ஆய்வு மையம் கூறியது: மிசோரத்தின் லுங்லேய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.7 அலகுகளாக பதிவானது. லுங்லேய் மற்றும் அதனையொட்டிய பகுதிகளிலும் நில அதிா்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது....
கொரோனா வைரஸின் (Coronavirus) இரண்டாவது அலை காரணமாக, பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற வணிக நடவடிக்கைகள் மூடப்பட்டுள்ளன. சத்தீஸ்கரில் (Chhattisgarh) இதே நிலைதான், மே 15 முதல் 17 வரை இங்குள்ள பல மாவட்டங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், மது அருந்துபவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு புதிய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. வீட்டில் மதுபானம் (Alcohol)...
நாளை முதல் முழு முடக்கம் அமலுக்கு வருவதால் சென்னையில் இருந்து மக்கள் இருசக்கர வாகனங்களில் சொந்த ஊர் நோக்கி செல்கின்றனர். கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு முடக்கங்ளுடன் பேருந்து, ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. தனியாக செயல்படுகிற மளிகை, பலசரக்கு...