தமிழகம்

இந்திய இராணுவத்தினர் என கூறி மதுரையில் வணிகர்களை குறி வைத்து தொலைபேசி மூலமாக பேசி நூதன முறையில் டேட்டாக்களை திருடி பணம் பறிக்க முயன்ற வடமாநில கும்பல்

378views
மதுரையில் வணிகர்களே குறிவைத்து தற்போது வடமாநில கும்பல் ஒன்று நூதன முறையில் கொள்ளையடிக்க தொடங்கியுள்ளது. இந்த கும்பல் தற்போது மதுரையில் செய்யல்பட்டு வரும் முன்னணி வணிக நிறுவனங்களை தொடர்பு கொண்டு நாங்கள் மதுரையில் செயல்படும் இந்திய ராணுவ கிளையிலிருந்து பேசுவதாக கூறி அவ்வப்போது ஏமாற்றி வருகிறது.
இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்படும் தனியார் வாகன டயர் விற்பணை நிலையத்தில் இன்று தொடர்பு கொண்ட மர்ம கும்பல் டயர் விற்பனை நிலையத்தின் ஊழியர்களிடம் பேசும்போது தங்களது இராணுவ வாகனங்களுக்கு டயர் தேவைப்படுவதாகவும் அவற்றை தாங்கள் கூறும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என இந்தியில் பேசுகின்றனர்.
இந்தியில் பேசும் அந்த கும்பல் வாட்ஸ்அப் எண் மூலம் தங்களுக்கு இந்த சைஸ் டயர் தேவைப்படுகிறது என கூறிய கும்பல் பணத்தை நாளை மதுரை விமான நிலைய ராணுவ கட்டுப்பாட்டு மையத்திற்கு பொருளை ஒப்படைத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறி மதுரை விமானநிலையம் முகப்பு வைக்கப்பட்ட ஒரு லிங்கை whatsapp க்கு அனுப்பி உள்ளனர். அவர்களது பேச்சில் சந்தேகம் அடைந்த அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்களிடம் பேசுவதை தவிர்த்து உள்ளனர்.
தொடர்ந்து அந்நிறுவனத்தின் பல கிளைக்கு மீண்டும் அந்த வடநாட்டு கும்பல் தொடர்பு கொண்டு தங்களது ராணுவ வாகனங்களுக்கு டயர் தேவைப்படுவதாக கூறி., மீண்டும் தொல்லை கொடுத்துள்ளது. அடுத்த சில நிமிடங்களிலே டயர் கடை உரிமையாளருக்கு அதே நபர் போன் செய்து டயர் தேவைப்படுகிறது., நாளை காலை மதுரை விமானநிலைய ராணுவ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். தங்களது வாட்ஸ் அப்பிற்கு ஒரு லிங்கை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மேலாளரும்., உரிமையாளரும் இது போலியானது என உறுதி செய்தனர்.
அந்நிறுவனம் உடனடியாக விமானநிலையத்தில் உள்ள காவலர்களுக்கு தொடர்புகொண்டு இதுபோன்ற நபர் யாரும் இருக்கிறார்களா.? என விசாரித்துள்ளனர். மேலும்., முன்னாள் ராணுவத்தினரிடம் அவர்கள் கேட்ட பொழுது எந்த ஒரு பொருளையும் இந்திய ராணுவம் தனி நபர்களிடம் வாங்காது எனவும்., அப்படி வாங்க வேண்டும் என்றால் டெண்டர் முறையில் பொருட்களை கொள்முதல் செய்ய மட்டுமே அனுமதி உள்ளது. தொடர்ந்து., ராணுவத்திற்கு என சலுகைகள் பல உள்ளது. அதனால் நேரடியாக எந்த ஒரு ராணுவ அதிகாரியும் இதுபோன்று அழைப்பை கொடுக்க மாட்டார்கள் என தெரிவித்ததாக கூறுகின்றனர்.
அந்த கும்பல் அனுப்பும் லிங்கை ஓபன் செய்தால் வணிகநிறுவனத்தின் உரிமையாளர்களின் தொலைபேசியில் உள்ள வங்கி விவரங்கள் உள்ளிட்ட அனைத்து டேட்டாக்களும் திருடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே., வணிகர்கள் இதுபோன்று யாரேனும் அழைத்தால் அவர்கள் அனுப்பும் லிங்குகளை ஓபன் செய்யாமல் உடனடியாக அறிய உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் ஏமாற்றும் வட மாநில கும்பல் தற்போது நூதன முறையில் மதுரையைச் சேர்ந்த வணிகர்களின் பணத்தை திருடுவதற்கு இந்திய ராணுவத்தை பயன்படுத்தி திட்டம் திட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!