தமிழகம்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சிறந்த ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த மாணாக்கருக்கு பரிசு

235views
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார்.
ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது என்ற மைய கருப்பொருளில் நூறு பள்ளிகளை சேர்ந்த 300 மாணவர்கள் சமர்ப்பித்த 150 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை ஆட்சியர் பார்வையிட்டார். தனியார் பள்ளிகளில் சீனியர் பிரிவில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, ராமநாதபுரம் ஷிபான் நூருல் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, பரமக்குடி வ.உ.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி, ஜூனியர் பிரிவில் முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் பள்ளி, உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, அரசு பள்ளிகளில் சீனியர் பிரிவில் தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜூனியர் பிரிவில் கமுதி ஊராட்சி ஒன்றியம் குண்டு குளம் நடுநிலைப்பள்ளி, ஆர்.எஸ்.மங்கலம்ஊராட்சி ஒன்றியம் ஆப்பிராய் நடுநிலைப்பள்ளி, முதுகுளத்தூர் செல்வநாயகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த கட்டுரைகள், அறிவியல் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.

தேர்வான ஆய்வு கட்டுரைகள் டிச. 10 ,11ல் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இப்பள்ளி மாணவ, மாணவியருக்கு முதன்மை கல்வி அலுவலர் அ.பாலு முத்து பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் மு.அய்யாசாமி, நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி தாளாளர் சையத் அப்துல்லா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உ.சதக் அப்துல்லா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில செயலர் எம் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் எம்.முருகம்மாள், ட்டி.பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி கல்வி அலுவலர்கள் ஆர்.பிரின்ஸ் ஆரோக்கியராஜ், ஜோ.ரவி, அறிவியல் இயக்க மாநில செயலர் எஸ்.ட்டி.பாலகிருஷ்ணன், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி முதல்வர் எம்.ராஜமுத்து, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி இயற்பியல் உதவி பேராசிரியர் எம்.கருணாகரன் அறிவியல் இயக்க மாவட்ட செயலர் கு.காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் எம்.பாலமுருகன் நன்றி கூறினார். அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள், சசிகுமார், பரமேஸ்வரன், ஜெரோம், கணேசன், லியோன், விஜயராம், சாகுல் மீரா ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளை செய்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!