இந்தியா

மும்பை அந்தேரி தமிழ் சங்கமத்தின் 9ஆம் ஆண்டு விழா மற்றும் மகளிர் தின விழா

15views
மும்பை அந்தேரி தமிழ் சங்கமத்தின் 9ஆம் ஆண்டு விழா மற்றும் மகளிர் தின விழா-மார்ச்8 ஞாயிறு மாலை 4 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது.

நிகழ்வின் தொடக்கமாக குத்து விளக்கேற்றி , தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது, அதனை தொடர்ந்து வரவேற்புரை, பரதநாட்டியம், சிறுவர் நடனம், மகளிர் நடனம், பட்டிமன்றம் , விளையாட்டு இன்னும் பல பல்சுவை நிகழ்ச்சிகள் அரங்கேறியது, அதன்பின் கடந்த ஆண்டு பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு பதக்கத்துடன் கூடிய கேடயம் மற்றும் சங்கமத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டது!

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, பகர்ஹர் கல்லூரியின் முதல்வர் வனஸ்ரீ வலேச்சா மற்றும் மிகவும் புகழ்பெற்ற நூலான கீழடி நம் தமிழினத்தின் முதல் காலடி நூலாசிரியரான திரு. நீ. சு. பெருமாள் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

குழுத் தலைவர். திரு. கண்ணன், தலைவர் வெ. குமார், செயலாளர், மகேஷ்வரி குணசீலன், பொருளாளர், குமார கிருஷ்ணன், ஸ்ரீனிவாசன், மற்றும் இவர்களுடன் பாஸ்கரன் பாதே, சரளா வெங்கடேஷ், சுதா பாலன், கலைச்செல்வி முருகன், அபிராமி பாஸ்கர், பானுப்பிரியா செல்வன், பால் மணி, ராஜூ, ம. ஆனந்தராஜ் இவர்களது தலைமையில் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!