கவிதை

யாதுமானவனே….

66views
எனது முள்காட்டில்
முதல் முதலாய் மலர்ந்த ரோஜா நீ!
உனது
காதலால் என் காயம் தனை ஆற்றினாய்!
பூக்களின் சிறகுகளை
தந்தெனை மாற்றினாய்!
வலிகளை போக்கும் மருந்தாய்
என் மனதைத் தேற்றினாய்!
தேள் கொட்டிய வலியையே அனுபவித்த எனக்கு
முதன் முதலாய் தேனை ஊட்டினாய்!
எனக்கான வழிப்பாதைகள் முடிந்தது என்று
நினைக்கும் வேளையில்
நான் நடக்க நீ
புது சோலையைக்
காட்டினாய்!
துன்பங்கள் எனைத் தீக்கனலில் வாட்ட
நீ மட்டும் என்னைப் பூந்தொட்டிலில் தாலாட்டினாய்!
பரிதவித்து பாதியில் நின்ற என்னைப்
பட்டாம்பூச்சி போல மாற்றினாய்!
எனக்கான வானம் உடைந்ததென
நினைக்கும் வேளையில்
புதுவானமே எனக்காக
உருவாக்கித் தந்தாய்!
என் வாழ்வில் எனக்காக கடவுள் தந்த
இன்னோர் தாய் நீ!
– கவிதாகுமாரி, தாராபுரம்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!