தமிழகம்

காரைக்குடியில் காணாமல் போன இரு சிறுமிகள் நான்கு மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்

49views
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அவரது தோழியுடன் திடீரென காணாமல் போனதாக சிறுமியின் தந்தை காரைக்குடி உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் நேற்று மாலை 3.30 மணியளவில் புகார் அளித்தார்.புகாரை பெற்றுக் கொண்ட உதவி கண்காணிப்பாளர், உடனடியாக சிறுமியின் வீட்டுக்குச் சென்று பெற்றோர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டார்.  அவர்களின் செல்போனையும் ஆய்வுக்கு உட்படுத்தினார்.

உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின்
அப்போது வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியிடம் இருந்து அவரது தாயாருக்கு வந்த புதிய செல்போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆகாஷ் என்ற நபருடன் சிறுமிகள் தூத்துக்குடியில் இருப்பதும், சென்னை செல்ல பேருந்தில் பயணித்துக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக தூத்துக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஜோஸ் என்பவரை தொடர்பு கொண்டு சிறுமிகளை மீட்க கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டு எட்டையபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்
பின்பு சிறுமிகள் இருவரும் காரைக்குடிக்கு அழைத்து வரப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  நேற்று  மாலை 3.30 மணி அளவில் புகாரை பெற்று, இரவு 7.30 மணிக்கு நான்கு மணி நேரத்தில் கண்டுபிடிக்க விரைந்து செயல்பட்ட காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் ராஜ்குமார்,உதவி ஆய்வாளர் பூர்ண சந்திர பாரத மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுக்கு உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.
செய்தியாளர் : சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!