தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

61views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக நிறுவுனர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் முன்னிட்டு பொதுக்கூட்டம் அங்குள்ள சந்தை மைதானத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சுபாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கழகத்தின் செய்தி தொடர்பாளர் கோவை சத்தியன் கலந்து கொண்டார். வேலூர் மாநகர செயலாளர் எஸ்ஆர்கே அப்பு. மாநில மாணவரணி துணை செயலாளர் எம்.டி.பாபு, மாநகர அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரகாசம், விவசாய அணிசெயலாளர் மற்றும் பஞ்சாயத்து துணை தலைவர் சுந்தர்ராஜ், மாநகர எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் மற்றும் வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், பிரம்மபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் புகழ்வேந்தன், ராமமூர்த்தி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!