தமிழகம்

அழிந்து வரும் விவசாயம் மற்றும் மாட்டு வண்டிகளை காக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாட்டு வண்டி வாழ்க்கையை மேற்கொண்டு வரும், ஐந்து வயது குழந்தையுடன் பயணிக்கும் தம்பதி

134views
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் , கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை விழிப்புணர்வு மாட்டு வண்டி வாழ்க்கை நடத்தி வரும் தம்பதி, திருமங்கலம் வழியாக சென்றபோது, அவர்கள் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் , கடந்த பல ஆண்டுகளாகவே அழிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்கவும், கிராமப்புறங்களில் அழிவின் விளிம்பில் சென்று கொண்டிருக்கும் மாட்டு வண்டிகளை காக்கவும் வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மாட்டு வண்டியிலேயே தனது ஐந்து வயது குழந்தையுடன் லிவி மற்றும் அனுஸ்ரீ தம்பதியினர் தங்களுடைய வாழ்க்கை பயணத்தை ஒட்டி வருகின்றனர்.

நாள்தோறும் 10 கிலோமீட்டர் தொலைவு வரை காளை மாடு செல்ல முடியும் என்பதால் , தினந்தோறும் 10 கிலோமீட்டர் தூரம் வரை மாட்டு வண்டி பயணத்தில் வருவதாகவும், இன்று வரை 45 நாட்கள் கடந்து வந்துள்ளதாகவும் , இந்த விழிப்புணர்வு மாட்டு வண்டி வாழ்க்கை பயணம் சென்னை வரை நடைபெற உள்ளதால், ஆங்காங்கே பாதுகாப்பின்மை, பல்வேறு இடையூறுகளையும் தாண்டி இந்த விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்து வருவதாக தம்பதி தெரிவித்தனர்.  இந்த வினோத மாட்டு வண்டி வாழ்க்கை விழிப்புணர்வு பயணத்தை, ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் விசித்திரமாக பார்வையிட்டனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!