தமிழகம்

மதுரையில் 70 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த வாலிபர் கைது

123views
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி சுப்புலட்சுமி கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்ற சொறி (வயது 31) வாலிபர் நேற்று இரவு மூதாட்டியை கற்பழித்து கொலை செய்துள்ளார்.
நேற்று காலை நீண்ட நேரமாக மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தபோது மூதாட்டி இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவல் அறிந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து அர்ஜுனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!