கவிதை

குக்கூ

178views
தனிக் கிளையிலமர்ந்துகொண்டு
தனிப் பாடல் பாடுகின்றாய்
உன் குரலால் காற்றுக்கு மறு ஜென்மம்
அழகான இசை வாழ்வு
வாங்கக் கிடைக்காத இசைக் கருவி
உனது குரல்
புலப்பாடாத இசையருவி
நனைக்கின்றாய்
துவட்ட முடியாத ஈரம் உனது இசை
நீ கூவும் தமிழ் எழுத்து தேன் கூட்டின் வடிவம்
பிழிந்து தருகின்றாய்
இதயத்தில் இனிக்கிறது
உன் பாடல் கேட்டதினால்
அப்படியே நிற்கின்றேன் குயிலே
நீ மரம் தாவிப்போவதென்றால்
எனக்கும் உந்தன் சிறகு கொடு
வயற்காட்டில்
என் மக்கள் பாடும் தெம்மாங்கில்
நீயும் வந்து கலந்துவிடு
கூடிப் பாடிய பெருமை சேரும்.
பாரிகபிலன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!