கவிதை

கண்ணீர்த் துளிகளிடையே மயானப் படகு

18views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
பூ உலகம் இதுவரை
கண்டிராத ஒரு புரட்சியை
ஈரான் இன்று எழுதிக் கொண்டிருக்கிறது…
இறப்புகளில்
உயிர்ப்பு வைக்கும்
இது ஓர் உலக அதிசயம்…
கொடும் சூறாவளிப் புயல் சுருட்டிய
ஒரு குளிர் நதியை
அது இன்று
நடக்க விட்டிருக்கிறது…
தன் தேசம் மட்டுமின்றி
உலக மக்களின்
கண்ணீர்த் துடுப்புகளில்
ஒரு மயானப் படகு
மிதந்து கொண்டிருக்கிறது…
இரும்பு ஆயுதங்களை
அணிந்து கொண்டு
தேசத்துக்காக நிமிர்ந்து நின்ற
ஒரு பூவின் பொசுங்கலில்
மீண்டும் ஒரு தேசம்
இன்று உயிர்த்தெழுகிறது…
வெற்று முழக்கங்களோ
வெற்றி ஆர்ப்பாட்டங்களோ
வீண் ஆடம்பரங்களோ இல்லாத
ஒரு மரண வெற்றி
மௌனமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது…
எல்லோர் மரணங்களும்
இப்படி அமைவதில்லை…
ஈரானிய தேசத் தலைவர்
ஆயத்துல்லா அலி கொமேனி
இறந்தும் உயிர் வாழ்கிற இறைநேசர்…
துடைத்தெறியப்பட முடியாத
பழமைப் பூர்வீகங்கள்…
தோட்டாக்களாலும் ஏவுகணைகளாலும்
சாய்க்கப்பட முடியாத
வீர உள்ளங்களின் ஏக்கங்கள்…
சாம்பல் முடிய நெஞ்சங்களின்
சாகா ரணங்களில் முளைத்திடும்
பீனிக்ஸ் உணர்வுகள்
மீண்டும் உத்வேகம் அடைந்திருக்கின்றன…
வீழ்த்தப்பட்ட ஒரு மாபெரும்
தேசத்தந்தையின்
உடலில் இருந்து
ஒரு புதிய சகாப்தம் பிறக்கிறது…
குழந்தைப் பூவோடு
தாத்தாத் தலைவரைப் பொசுக்கியப்
புல்லரசுகள் இப்போது
வேடிக்கை பார்க்கலாம்…
நாளை மீண்டும்
ஈரானே புதிதாகப் பிறந்து
புதிய வல்லரசாகலாம்…
அப்போது
இந்தப் புல்லரசுகள்
பொசுங்கிப் போகலாம்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!