தமிழகம்

முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

18views
முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது .
விழாவில், கல்லூரி நிர்வாக அறங்காவலர் திருமதி ரங்கராஜன் மகாலட்சுமி கிஷோர் அவர்கள் விழாவினைத் தொடக்கி வைத்து தலைமையுரை வழங்கினார்கள்.
கல்லூரியின் நிறுவனத் தலைவர் கர்னல் டாக்டர் ஸ்ரீ ஆர் ரங்கராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். இணை இயக்குநர் செல்வி ஸ்கந்தா கிஷோர் அவர்கள் விழாவில் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ வி கே சாந்தி அவர்கள் வரவேற்புரை நல்கினாரகள். அவர் பேசும்பொழுது ”இளம்தலைமுறைக் கல்வி என்பது அதீத விஞ்ஞானத் தன்மையுடன் தொடர்பு கொண்டதாகி விட்டது. சமூக மாற்றம், சுயமுன்னேற்றம், வாழ்க்கைச் சூழல் இவற்றை உருவாக்கிக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட காம்காஸ்ட் நிறுவனச் செயல்பாடு துறையின் மூத்த இயக்குனர் திரு. வினய் யூகே பேசும்போது, “ சமூக மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் தொடர்ந்து வாசிப்பைச் செய்ய வேண்டும். உலகம் செல்கிற வேகத்தில் பயணிக்க வேண்டும். தோல்வி வரும் அதைக் கண்டு பயப்படக்கூடாது” என்றார்
விழாவில்,முன்னாள் மாணவர்கள் கருத்துரை ஆற்றினார்கள்., அவர்களுக்குக் கல்லூரியின் சார்பாக சிறப்புகள் செய்யப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் N.சாமுண்டீஸ்வரி, முனைவர் D.ஹேமலதா, திட்டஅலுவலர் முனைவர் வி.வடிவேல்நிர்வாக அலுவலர் பேராசிரியர் என்.சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்புச் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!