கவிதை

உனக்காகத்தான் இந்த வாழ்கை…..

85views
உனக்காகத்தான் – இந்த
வாழ்கை…..
எனை மலரவைத்து…..
மகிழவைத்தவள்…
விழிகள் தேடும்போதும்…
விரல்கள் அணைக்கும் போதும்…
கட்டியணைத்து….
கழிப்பு… கண்டு…
பயணங்களின் ராகம்…
பறவை போல்……
பறந்துகொண்டே…..
நான் நேசிப்பதற்காக…
நீ பிறந்தவள்…
உன்னால்தான்…
அம்மா…. என்ற…
அழகிய சொர்க்கத்தை…
பெற்றேன்……

எச்சில்… முத்தம்… என்
முகத்தில் மோதும்போது…
மொத்தத்தையும் ….
மறந்து….
கரைந்து.. கரைந்து..
காணாமல் போவேன்……

ஓடி கொண்டிருக்கும்…..
ஒற்றை பாதையில்….
ஒருகோடி இளைப்பாறுதல்.. நீ …..
நான்
மரணிக்கும் வேளையில் கூட
மகளே நீ கலங்காதே..
ஏனென்றால்…. இந்த…
அம்மாவின்….
அத்தனை இன்பத்தையும்…
நீ மட்டுமே சுமந்தவள் என்பதால்…..
புனித ரோஸிட்டா மலர்
திருச்சி

1 Comment

  1. அருமையான கவிதை. நெஞ்சில் நிற்கும்
    . வாழ்த்துக்கள் தோழி
    செ. பாலா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!