தமிழகம்

காட்பாடி தாராபடவேடு அருகே சாய் சுமதி மருத்துவமனையின் 2வது கிளை திறப்பு விழா : வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் பங்கேற்று திறந்து வைப்பு

14views
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வி.ஐ.டி. சாலை தாராபடவேடு அருகே சாய் சுமதி மருத்துவமனையின் 2வது கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தொழிலதிபரும், மோதி சிக்கன், மோதி ஆட்டோ பைனான்ஸ் மற்றும் சாய் சுமதி மருத்துவமனையின் நிறுவனத் தலைவருமான ஜி. ஏழுமலை தலைமை தாங்கினார். ஆர். சுமதி முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்பித்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அழைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், இனிப்புகளும் வழங்கப்பட்டன. புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் 24 மணி நேர பொது மருத்துவ சேவை, அனைத்து வகையான அறுவை சிகிச்சை வசதிகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை அறைகள் (ஆபரேஷன் தியேட்டர்) அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கின்றனர். பொதுமக்களுக்கு தரமான மற்றும் சிறப்பான மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்விழாவில் மருத்துவர்கள் இ. மோதிலால் யாதவ், இ. கிரன்லால் யாதவ், எஸ். யோகேஸ்வரி, கே.இ. பூஜா உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!