தமிழகம்

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா கடத்தல் சினிமா பாணியில் காரை துரத்தி பிடித்த போலீசார். 100 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் மூவர் கைது

77views
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் யாதவ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களது வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களை போலீசார் முடக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கஞ்சா அதிகம் கடத்தி வந்து விற்பனையில் வாலிபர்கள் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசார் துவரிமான் நான்குவழிச்சாலையில் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த கேரளா பதிவெண் கொண்ட சொகுசு கார் அதிவேகமாக நிற்காமல் சென்றது.
போலீசார் காரை சினிமா பாணியில் துரத்தி மடக்கி பிடித்து சோதனை செய்தபோது காரில் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த வாலிபர்களான மன்சூர்அலி, முத்தாலிப், நாசர் ஆகிய மூன்று வாலிபர்களை கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!