தமிழகம்

கச்சத்தீவு திருவிழா : தமிழக பக்தர்கள் 2,400 பேர் பங்கேற்பு

95views
கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. பக்தர்கள் செல்லும் படகுகள் பாதுகாப்புடன் சென்று வர கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வாழ்த்தி அனுப்பினர். அவர் தெரிவிக்கையில், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழா 2023 இன்றும், நாளையும் நடைபெறுகின்றன. விழாவில் பங்கேற்க இந்திய அரசு அனுமதியுடன் தமிழக அரசு வழிகாட்டல் படி தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 2,408 பேர் விண்ணப்பித்து அவர்களுக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டு இன்று 60 விசைப்படகுகள், 11 நாட்டுப்படகுகள் மூலம் சென்றனர். பயணம் சென்ற அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. கச்சத்தீவு சென்று மீண்டும் ராமேஸ்வரம் வரும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய கடற்படை, தமிழக கடற்படை, மாவட்ட காவல், மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர்கள் பாதுகாப்புடன் சென்று அரசு வழிகாட்டுதலை பின்பற்றி திருவிழாவில் பங்கேற்று வரவேண்டும். பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார். மெரைன் எஸ்பி சுந்தரவடிவேல், எஸ்பி தங்கதுரை, மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர், துணை இயக்குநர்கள் காத்தவராயன், பிரபாவதி, கூடுதல் எஸ்பி உன்னிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!