இலக்கியம்நேர்காணல்

pika_bhoo எனும் நந்தினி

1.3Kviews
னிதர்களுடைய  மகிழ்ச்சி எப்பொழுதும் எதிர்பார்ப்பில்லாத எக்ஸைட்மெண்டுகளில் அடங்கியுள்ளது.  அந்த எக்சைட்மெண்டுகளைப்  பூர்த்தி செய்வதாக கிப்டுகள் அமைகின்றன.  அந்த கிப்டுகளுக்கு எப்பொழுதுமே விலை இருக்கும்.  ஆனால், அந்த கிப்ட் வாங்கப்பட்டு நம் மனதுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் பகிரப்படும் போது விலைமதிப்பில்லாததாக மாறும்.  அந்த மாதிரியான விலைமதிப்பில்லாத பல கிப்டுகளையும், நிமிடங்களையும் உருவாக்கிய மற்றும் உருவாக்கிக்கொண்டிருக்கும் கலை ஆசிரியர் தான் நந்தினி.

இவர் தற்போது பி.எஸ்சி பிஷிசியன் அசிஸ்டண்ட் படித்து முடித்து விட்டு கைவினைப் பொருட்களின் மீது கொண்ட ஆர்வத்தால், சமூக வலைதளத்தை சரியாகப் பயன்படுத்தி ஆன்லைன் கிராப்ட் ஷாப் மூலம், தான் செய்யும் கைவினைப் பொருட்களை பரிசளித்து வருகிறார்.  மேலும் இருக்கும் நேரங்களில் கிராஃப்ட் ஒர்க் ஷாப், கிராப்ட் காம்படிஷன் போன்றவற்றை இணைய உதவியுடன் ஆன்லைனில் நடத்தி வருகிறார்.
இவர் தற்போது நடத்திவரும் கோடைகாலப் பயிற்சி வகுப்பின் மூலம் 40 மாணவர்களுக்கு கலை ஆசிரியராகவும், தன்னுடைய கனவை சரியாக வடிவமைத்து, நேரத்தை சரியாகப் பயன்படுத்துபவராகவும் விளங்கி வருகிறார்.
‘கிராப்ட்னா என்னங்க நந்தினி’ அப்படின்னு கேட்ட போது, ‘கிராப்ட் அப்படினா அது ஒரு பொருள்னு நினைப்பாங்க. ஆனா அப்படி இல்ல. அது நம்ம கொடுக்கணும்னு  நினைக்குறவங்களுக்காக நம்ம அக்கறையோடவும், அன்போடவும் ஸ்பெண்ட் பண்ணற டைம். இட்ஸ் நாட் ஜஸ்ட் அ கிப்ட். இட்ஸ் அ மெமோரபல் மெமரி’ அப்படின்னு ரொம்ப எக்ஸைடாகி  அன்பு கலந்து சொன்னாங்க.

நந்தினி தன் சிறுவயது முதலே கைவினைப்பொருட்களின் மீது ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். தன்னுடைய பொழுதுபோக்கிற்காகவும், நண்பர்களுக்கு பரிசளிக்கவும் நிறைய கைவினைப் பொருட்களைச் செய்து தன் கனவை நோக்கியப் பயணத்தை சிறு வயதிலேயே ஆரம்பித்திருக்கிறார். முதலில் இலவசமாகவும், பின்னர் தான் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டும் பணம் வாங்கியும் கைவினைப்பொருட்களைப் பரிசளித்துள்ளார். அதன்பின் தன் நண்பர்கள் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் வரும் ஆடர்களை வைத்துப் பொருட்களை பரிசளித்துள்ளார். அதன் பின்னால் இன்ஸ்டகிராமில் pika_bhoo என்ற பெயரில் ஆன்லைன் கிராப்ட் ஷாப் ஆரம்பித்து, தன்னுடைய முழு நேரத்தையும் கிராப்டிலேயே செலவிட்டு வருகிறார்.

நந்தினி தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தின் மூலம் 25க்கும் அதிகமான கேட்டகிரியில் கைவினைப் பொருட்களைச் செய்து பரிசளித்து வருகிறார். மேலும் ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கைவினை பொருட்கள் செய்வது எவ்வாறு என்றும் பயிற்சியளித்து வருகிறார்.

ஒரு ஆர்ட் டீச்சரா குழந்தைகளுக்கு சொல்லித் தரும்போது எப்படி இருக்கும் என்று கேட்டபோது, அது ரொம்ப ஹாப்பியா இருக்கு. சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கிற தமிழர் ஒருத்தர் என்னோட இண்டகிராம் அக்கவுண்டப் பார்த்து, இங்க குழந்தைகளுக்கு கிளாஸ் எடுப்பீங்களான்னு கேட்டாங்க. நானும் எடுத்தேன். அந்த குழந்தைங்க எல்லாம் ரொம்ப ஆக்டிவா இருந்தாங்க. கிராப்ட் ஒர்க் செஞ்சு முடிச்ச அப்புறம் அவ்வளவு ஹேப்பியா இருந்தாங்க. சோ அது சூப்பர்பா இருந்தது என்றார்.

நந்தினி தன்னுடைய கிராப்ட் கிப்ட் ஷாப்பை நான்கரை ஆண்டுகள் நடத்தி வருகிறார். அதில் முக்கியமாக அவர் குறிப்பிட்டது அவருடைய நேர மேலாண்மை பற்றி தான். மேலும் எல்லாருக்குமே ஏதோ ஒரு ஆர்வம் இருக்கும். நம்ம படிக்குற படிப்புகள மட்டுமே நம்பாமல் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸ்லையும், நம்மள ஈடுபடுத்திக் கொண்டு ஏதாவது கத்துக்கணும். அந்த ஆர்வத்த பாலோ பன்னனும் என்றார்.
கடைசியாக நீங்க சொல்லணும்னு நினைக்குற விசியம் எதுவா இருக்கும் நந்தினி என்று கேட்ட போது, pika_bhoo க்குனு மோட்டோ இருக்கு, அது வி வொர்க் பார் யுவர் மேஜிக்கல் மொமண்ட்ஸ் என்று நந்தினி புன்னகையுடன் சொல்லி முடித்தார்.
ந்தினியினுடைய நாட்கள் மேஜிக்கல் மொமண்ட்ஸில் நிறையவும், அவரது எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் நடந்தேறவும் நான் மீடியா வாழ்த்துகிறது.

  • ந.செல்வ முருகன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!