தமிழகம்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ, கமிஷ்னர், மேயர் ஆய்வு – ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் வரும்?

129views
வேலூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை உள்ளே வாடகை கடைகள் திறக்கப்படவில்லை.  நடைமேடை முழுவதும் சிறிய, சிறிய கடைகள் வர ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாக நடைமேடை உள்ளே, வெளியே நிறைய கடை வந்து குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுகிறது.
ஆளும்கட்சியினரும், மாநகராட்சி 4-வது மண்டல ஊழியர்களும், செக்யூரிட்டிகளும் மாமூல் வாங்குவதால் அந்த நடைமேடை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவதில்லை.
இதுகுறித்து மாநகராட்சிக்கு பல புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன.
இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.  உடன் மாநகராட்சி கமிஷ்னர் அசோக் குமார், மேயர் சுஜாதா உள்ளிட்ட 4-வது மண்டல அதிகாரிகள் இருந்தனர்.  ஆய்வுக்கு வந்த சென்ற சில மணி நேரத்தில் மீண்டும் பிளாட்பார கடை விற்பனை சூடுபிடிக்க துவங்கின.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!