தமிழகம்

ராமநாதபுரம் இம்பா மகளிரணி நிர்வாகிகள் நியமனம்

47views
ராமநாதபுரத்தில் அனைத்திந்திய முதலியார், பிள்ளைமார் சங்க (இம்பா) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் எம்.எஸ்.வாசன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட மகளிரணி தலைவர் உமா வாசன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட மகளிரணி தலைவராக இருந்த உமா வாசன், மகளிரணி மாநில செயலராக நியமிக்கப்பட்டார். மாவட்ட மகளிரணி செயலராக இருந்த விமலா ராஜேந்திரன் மாவட்ட மகளிரணி தலைவராக தேர்வானார். மாவட்ட மகளிரணி செயலராக டி.விஜி, பொருளாளராக ஏ.உமா மகேஸ்வரி, துணை தலைவர்களாக என்.செல்வராணி, எம்.ஜெயா, இணை செயலர்களாக எம்.பரமேஸ்வரி, ஆர்.கலைமதி, சரஸ்வதி, யு.கே.கார்த்திகா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். மாவட்ட துணை தலைவர்கள் மோகன், தமிழ்வாணன் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!