தமிழகம்

தமிழகத்தில் முதல் முறையாக ரூ. 40 லட்சம் பிணையில்லா வங்கி கல்விக்கடன் – சு. வெங்கடேசன் எம்.பி பாராட்டு.

72views
மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேரந்த மதியழகன் என்பவரது மகன் எம்.யோகேஷ்வருக்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் முதுகலைப்பட்டம் பயிலுவதற்கு தேர்வாகியிருந்தார்.
மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள யூனியன் வங்கிக் கிளை மூலம் அம்மாணவருக்கு ரூ.40 லட்சம் பிணையில்லா கல்விக்கடன் வழங்கப்பட்டது. மாணவர் விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் கல்விக்கடன் வழங்கும் பணியை வங்கி அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர்.
இன்று யூனியன் வங்கியின் சார்பில் தெற்கு மாசி வீதி கிளையில் மாணவர் யோகேஷ்வருக்கு கல்விக்கடனுக்கான ஆணையை வழங்கி வங்கி மாணவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன். துரிதமாக செயல்பட்டு கல்விக்கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் அனைவருக்கு பாராட்டுகளை தெரிவித்தேன்.
தமிழ்நாட்டில் கல்விக்கடன் வழங்குவதில் முன்னுதாரணமான மாவட்டமாக மதுரை மாவட்டம் திகழ்கிறது. இந்த ஆண்டு 200 கோடி வழங்குவது என்று திட்டமிட்டு தொடர் கவனம் செலுத்தி வருகிறோம். யூனியன் வங்கியின் தெற்குமாசி கிளை மட்டுமே இந்த ஆண்டு இதுவரை ஒன்றரை கோடி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டினை போல இந்த ஆண்டும் மதுரை மாவட்டம் சாதனை புரியும்” என்று சு. வெங்கடேசன் எம்.பி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வங்கியின் சார்பில் முதன்மை மேலாளர் திரு.வரதராஜன, கிளை மேலாளர் சாரலஸ், துணை மேலாளர் திரு.ரதீஷ் ஆகியோர் பங்கெடுத்தனர்.
உடன் சிபிஎம் மாவட்ட செயலாளர் மா.கணேசன் செயற்குழு உறுப்பினர் நரசிம்மன் ஆகியோர் பங்கெடுத்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!