தமிழகம்

வட வேலூர் கூட்டுறவு கடன் சங்க தலைவரான அதிமுக பகுதி செயலாளர் நாகு அதிரடி நீக்கம்

145views
வேலூர் வடக்கு காவல்நிலையம் அருகே வட வேலூர் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.இதனுடைய தலைவராக அதிமுக பகுதி செயலாளர் நாகு (எ) நாகராஜ் உள்ளார். 11 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த சங்கத்தில் வணிக கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் வாங்கப்பட்ட கடன் நீண்ட நாட்களாக வசூல் செய்யபடாமல் இருந்தது.
இதுகுறித்து வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி விசாரணை செய்ததில் இதன் சங்க தலைவர் ராகு, நிர்வாக குழு உறுப்பினர்கள் சதாசிவம், நீலமேகம், சேகர், விஜயா, மனோகர், ராஜா, தமிழ்ச்செல்வி, வடிவேல் ஆகியோர் விதிமீறி தங்களது உறவினர்களுக்கு கடன் கொடுத்து அதை வசூல் செய்யாமல் ஏப்பம்விட்டு உள்ளனர்.
இதனையெடுத்து துணைப் பதிவாளர் 9 பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். கடந்த 1 ஆண்டுக்கு மேலாக சங்க கூட்டத்தை கூட்டவில்லை. நிர்வாகக்குழு ஒப்புதல் பெறாமல் சங்க செயலாளர் ஆனந்தனை சஸ்பெண்ட் செய்தது, அலுவலக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியை நிரந்தர பணிநீக்கம் செய்தது போன்ற முடிவுகளை தலைவர் நாகு எடுத்துள்ளார். அதன் 1983 ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சட்டவிதிகளில் கூறப்பட்டுள்ளதுபோல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!