சினிமா

தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் மறுவெளியீடு

34views
தமிழக முதலமைச்சர் விஜய் மூன்று வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மெர்சல்’ அவரின் பிறந்தநாளை முன்னிட்டு மறுவெளியீடு செய்யப்பட்டு தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
2017ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம் ‘மெர்சல்’ என்பது குறிப்படத்தக்கது . கடந்த 19 ந் தேதி சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 100 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ஜூன் 22 தேதி தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாள். அவர் முதல்வரான பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பது ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இதை முன்னிட்டு ஜூன் 19 தேதி அன்று திரைப்படம் மறுவெளியீடு ஆனது. இப்படத்தை KP Films சார்பாக கென்னடி வெளியிடுகிறார்.
கென்னடி இதற்கு முன் பல திரைப் படங்களை தன் கம்பெனி சார்பாக வெளியீட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைய போகிறது. அட்லீ இயக்கத்தில் வந்த இந்த படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், SJ சூர்யா ஆகியோர் நடித்து இருக்கின்றனர். மெர்சல் படத்தை 2017 ஆம் ஆண்டு தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்தது. இது அந்த கம்பெனியின் 100 வது படமாக பெருமையாக வெளியிட்டு இருந்தனர். தற்போது KP பிரியங்கா புரொடக்ஷன் சார்பில் கென்னடி வெளியிடுகிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!