ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவ-மாணவியருக்கு 3 பிரிவுகளாக ஓவியப்போட்டி நடந்தது. 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு கடல் வாழ் உயிரினங்கள் போட்டியில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி வே. பிரதிக்ஷா, ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி க. ரிமி தரிஷி, சேதுபதி நடுநிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் க. காளீஸ்வரன் ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர். 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வன உயிரினங்கள் போட்டியில் டி.டி.விநாயகர் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவிகள் பி.ஹரிஸ்மா, கே.அபிநயா, சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் மாணவர் மு. திருமுருகன் ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி பா.விஷாலி சிறப்பு பரிசு வென்றார்.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழக சுதந்திர போராட்ட வீரர் போட்டியில் டி.டி.விநாயகர் சுவார்ட்ஸ், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் கே.அரிபாஸ்கரன், நா.சந்தோஷ், ஜி.ஜெகதீசன் ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் எஸ். வெங்கடாசலபதி பரிசு, சான்றிதழ் வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் வி.சிவக்குமார் பங்கேற்பு சான்றிதழ் வழங்கினார். இளநிலை உதவியாளர் ஏ.பாலமுருகன், ஓவியர் ஜி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.