தமிழகம்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

71views
ராமேஸ்வரம் கால்நடை மருந்தகம் சார்பில் சம்பை கிராமத்தில் கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு முகாம் நடந்தது. கவுன்சிலர் தில்லை புஷ்பம் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் பாண்டி தொடங்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் தேவகி, டாப்னி ஆகியோர் ஆலோசனை வழங்கினர். கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்டது. தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயனடைந்தன. பசுங்கன்றுகளை சிறப்பாக பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கால்நடை ஆய்வாளர் ஜோதி தங்கராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கல்யாணி, சீனிவாசன், ஜானகி உள்ளிட்டோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!