விளையாட்டு

விளையாட்டு

இந்தியா ‘நம்பர்-3’ – ஒருநாள் தரவரிசையில்

ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 'நம்பர்-3' இடத்தில் நீடிக்கிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒருநாள் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஜிம்பாப்வே தொடரை 3-0 என முழுமையாக வென்ற இந்திய அணி, 111 புள்ளிகளுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.அடுத்து வரும் அக். 6ல் சொந்த மண்ணில் துவங்கும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா சாதிக்கும் பட்சத்தில் தரவரிசையில் முன்னேறலாம். நெதர்லாந்து...
விளையாட்டு

ஜிம்பாப்வே தொடர்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார், இதன் மூலம் சச்சினின் நீண்ட கால சாதனையை முறியடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 13...
விளையாட்டு

மீண்டும் வருகிறார் ரகானே: துலீப் டிராபியில் வாய்ப்பு

துலீப் டிராபியில் இந்தியாவின் ரகானே களமிறங்க உள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், உள்ளூர் முதல் தர போட்டி தொடரான துலீப் டிராபி 59வது சீசன் (2022-23) தமிழகத்தில் வரும் செப். 8-25ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் மேற்கு மண்டல அணி சார்பில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரகானே 34, விளையாட உள்ளார். இந்த ஆண்டு...
விளையாட்டு

டென்னிஸ் – இறுதிச் சுற்றில் பெட்ரா குவிட்டோவா

வெஸ்டர்ன் அன்ட் சதர்ன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு செக். குடியரசு வீராங்கனை பெட்ரா குவிட்டோவா முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் மசோன் நகரில் வெஸ்டர்ன் அன்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸும், செக். குடியரசு வீராங்கனை பெட்ரா குவிட்டோவாவும் மோதினர். இந்த ஆட்டத்தில் பெட்ரா...
விளையாட்டு

ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை தங்கம் வென்று சாதனை

பல்கேரியாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் ஆன்டிம் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஜீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை ஆன்டிம் பங்கல் படைத்துள்ளார் தகுதிச் சுற்றில் ஆன்டிம் 11-0 என்ற கணக்கில் ஜெர்மன் மல்யுத்த...
விளையாட்டு

தீபக் சாஹர் நீக்கம்: இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

1-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கும் இந்திய-ஜிம்பாப்வே தொடரின் 2வது போட்டி ஹராரேயில் இன்று தொடங்கவுள்ளது, இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. தீபக் சாஹர் கடந்த போட்டியில் மீண்டும் வந்து அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் அவர் இந்தப் போட்டியில் இல்லை, காரணம் சொல்லப்படவில்லை, ஒருவேளை அவர் காயமடைந்திருக்கலாம் அல்லது ஏற்கெனவே உள்ள காயம் மறுபடியும் வேலையைக் காட்டியிருக்கலாம்...
விளையாட்டு

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், தரவரிசையில் 152-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் போர்னா கோரிச்சை எதிர்கொண்டார். மழையால் தடைபட்டு தொடர்ந்த இந்த ஆட்டத்தில் நடால் 6-7 (9-11), 6-4,...
விளையாட்டு

ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து 13-வது வெற்றி

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் ஹராரேயில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 40.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பிராட் இவான்ஸ்...
விளையாட்டு

குறைந்தது ஒருநாள் போட்டிகள் * இந்திய கிரிக்கெட் திட்டத்தில்

வரும் 2027 வரையிலான இந்திய ஆண்கள் அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் குறித்த விபரம் வெளியானது. இதில் ஒருநாள் போட்டிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வரும் 2023-2027 வரையிலான சர்வதேச போட்டிகள் குறித்த எதிர்கால அட்டவணை திட்டம் வெளியானது. இதன் படி இந்திய ஆண்கள் அணி அடுத்த 5 ஆண்டில் 38 டெஸ்ட், 42 ஒருநாள், 61 'டி-20' என மொத்தம் 141 சர்வதேச...
விளையாட்டு

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி திணறல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து திணறியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 55 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்களை இழந்தது. அலெக்ஸ் லீஸ் 5, ஸாக் கிராவ்லி 9, ஜோ ரூட் 8, ஜானி பேர்ஸ்டோ 0 ரன்களில் நடையை கட்டினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் பென்...
1 2 3 4 5 6 74
Page 4 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!