விளையாட்டு

விளையாட்டு

37 வருட சாம்ராஜ்ஜியத்தை தகர்த்த 17வயது சிறுவன்: விஸ்வநாதனை பின்னுக்கு தள்ளி No.1 வீரரானார் குகேஷ்

இளம் தமிழக செஸ் வீரரான ஜிஎம் குகேஷ், இந்தியாவின் முதல் தரவரிசை செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி அசத்தியுள்ளார். 2023 செஸ் உலகக்கோப்பையானது பாகுவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 81 வீரர்கள் நாக் அவுட் ஆன நிலையில், தமிழக இளம் வீரரான குகேஷ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி விளையாடி வருகிறார். இந்நிலையில், இரண்டாவது சுற்றில் தன்னை எதிர்த்து விளையாடிய மிஸ்ட்ராடின் இஸ்கண்ட்ரோவை வீழ்த்தியதற்கு பிறகு...
தமிழகம்விளையாட்டு

இராஜபாளையம் அருகே மாவட்ட அளவிலான (செஸ் )சதுரங்க போட்டி நடைபெற்றது..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் பரிசுகள் வழங்கினார். இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியில் உள்ள அக்ஷயா பன்னாட்டு(சிபிஎஸ்சி) பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. போட்டியை விருதுநகர் மாவட்ட சதுரங்கப் போட்டி கழக தலைவர் கோபால்சாமி துவக்கி வைத்தார். போட்டியில் மாவட்ட அளவிலான பள்ளிகளை சேர்ந்த...
விளையாட்டு

ரிஷப் பண்ட் அணியில் களம் காணுவது அவசியம் – இந்திய முன்னாள் வீரர்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்த ஒரு பேட்டியில், 'அணியில் மிடில் வரிசையில் இடக்கை ஆட்டக்காரர்கள் இருப்பது மிகவும் முக்கியம். முதல் 6 வரிசையில் நம்மிடம் இடக்கை பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. நிச்சயம் எதிரணியில் 2-3 இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். அவர்களை சமாளிக்க இடக்கை பேட்ஸ்மேன் அவசியம். 2007, 2011, 2013-ம் ஆண்டுகளில் பார்த்தால் நமது அணியில் கவுதம் கம்பீர், யுவராஜ்சிங் மற்றும் நான் ஆகிய...
விளையாட்டு

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – 65 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை.. இந்திய வீராங்கனைகள் அபாரம்

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய ஆடவர் அணி இழந்த பெருமையை மகளிர் அணி எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இது இலங்கை எடுத்த தவறான முடிவு என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை. ஆஸ்திரேலிய...
விளையாட்டு

2 வது டி-20 போட்டி: வெல்லப் போவது யார்?; மல்லுக்கட்டும் இந்திய – தென்னாப்பிரிக்க அணிகள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்ட் மைதானத்தில் நடந்த முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும்...
விளையாட்டு

தேசிய விளையாட்டு போட்டி; போல்வால்டில் தமிழக வீராங்கனை புதிய தேசிய சாதனை

தேசிய விளையாட்டு தொடரில் போல்வால்டில் தமிழக வீராங்கனை மீனா ரோசி 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்து தங்க பதக்கம் வென்றார். 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று காந்திநகர் மைதானத்தில் நடந்த தடகள போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையை...
விளையாட்டு

தேசிய விளையாட்டு இன்று தொடக்கம்- தமிழகத்தில் இருந்து 380 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

இந்தியாவில் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றான தேசிய விளையாட்டு 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த போட்டி பின்னர் நடைமுறை சிக்கல் காரணமாக சில சமயங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெறவில்லை. கடைசியாக 35-வது தேசிய விளையாட்டு 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. அதன் பிறகு தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா அச்சுறுத்தல்...
விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் ஷிகர் தவான் மற்றும் முகமது ரிஸ்வானின் தரமான சாதனைகளை தகர்த்தெறிந்த சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியின் நட்சத்திர வீரராக வளர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைத்த ஓராண்டிலேயே அணியின் முன்னணி வீரர் மற்றும் மேட்ச் வின்னராக வளர்ந்துள்ளார். டி20 உலக கோப்பையில் இந்திய அணி ஜெயிக்க, சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக சிறப்பாக ஆடியாக வேண்டும். அந்தளவிற்கு அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார். சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் அபாரமான சாதனைகளை படைத்துவருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20 சதத்தை அடித்த...
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கான 16 பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் நடந்து முடிந்த இருபதுக்கு இருபது தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட டேவிட் வோர்னர், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்ஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த நான்கு வீரர்களும் முழங்கால், கணுக்கால் பிரச்சனை மற்றும் ஓய்வு வழங்கப்பட நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இணைக்கப்பட்டுள்ளனர்....
விளையாட்டு

IND A vs NZ A | சஞ்சு சாம்சன் அரை சதம் பதிவு: தொடரை 3-0 என வென்றது இந்தியா

இந்திய-ஏ அணி நியூஸிலாந்து-ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. சஞ்சு சாம்சன் மூன்றாவது போட்டியில் அரை சதம் பதிவு செய்திருந்தார். நியூஸிலாந்து-ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடர் முழுவதும் சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய-ஏ அணியை சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்தி இருந்தார்....
1 2 3 4 74
Page 2 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!