செய்திகள்

தமிழகம்

கொரோனா நோயாளிகளுக்காக 100 மின்விசிறி வழங்கிய கோவை இளம் தம்பதியின் மனித நேயம்…

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகளை வாங்கி கொடுத்துள்ளனர் மனித நேயம் மிக்க இளம்தம்பதியினர். இது வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. 'தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவையிலும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, பல மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. அங்குள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில், ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால்,...
தமிழகம்

ஜவ்வாதுமலை அருகே பழமையான குத்துக்கல் கண்டெடுப்பு

ஜவ்வாதுமலை அருகே உள்ள சாளுர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குத்துக் கல் உள்ளதாக செங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, 'தி.மலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் அடுத்த சாளுர் கிராமம் மாரியம்மன் கோயில் எதிரே குத்துக் கல் உள்ளது. இது, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். 10 அடி உயரமும், 5 அடி அகலம் கொண்டது. முற்காலத்தில்...
வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் பணி: முன்கள பணியாளர்களுக்கு அழைப்பு!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் பணிபுரிய முன்கள பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தோற்றால் நேற்று ஒரேநாளில் 15,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 13ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 77பேர் நேற்று உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 13,728ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 1,08,855 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 9,90,919 பேர்...
இந்தியா

அசாமில் பலத்த நிலநடுக்கம்: குவஹாத்தி குலுங்கியது

அசாம் மாநிலம் சோனித்பூரை மையமாக கொண்டு பலத்த நிலநடுக்கம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 7.51 மணி அளவில் ஏற்பட்டது. 6.4 அளவிலான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டதாக அசாமில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் குவஹாத்தியில் இருந்து சோனித்பூர் வெறும் 150 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. எனவே இந்த நிலநடுக்கம் குவஹாத்தியில் வலுவாக உணரப்பட்டது என்று பிபிசி தமிழிடம் கூறினார் ஒரு குவஹாத்திவாசி....
இந்தியா

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தானாக முன் வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இனி இந்த விவகாரங்களை தாங்களே விசாரிப்பதாக அறிவித்திருந்து. இந்நிலையில், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக...
தமிழகம்

மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்' என்ற தலைப்பில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ள விவரம்: அனைவருக்கும் அன்பான வணக்கம்! ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன்...
தமிழகம்

கரோனா பரவல் காரணமாக அஞ்சல் நிலையங்கள் அரைநாள் மட்டுமே செயல்படும்

கரோனா பரவல் காரணமாக, அனைத்து அஞ்சல் நிலையங்களும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை அலுவலகம் சார்பில், அனைத்து அஞ்சல்துறைப் பிரிவு தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று 2-வது அலை தீவிரமடைந்துள்ளதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அஞ்சலகங்களிலும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இதன்படி, அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவை கவுன்ட்டர்கள் பிற்பகல்...
வணிகம்

இந்தியாவுக்கு உதவும் அண்டை நாடுகள்.. உற்சாகத்தில் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. !

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று  இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி, ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 508.06 புள்ளிகள் அதிகரித்து, 48,386.51 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 143.65 புள்ளிகள் அதிகரித்து, 14,485.00 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1841 பங்குகள் ஏற்றத்திலும், 1094 பங்குகள் சரிவிலும், 216 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான...
இந்தியா

கொரோனா பரவல் எதிரொலி..! இந்தியாவிலிருந்து தனி விமானம் மூலம் தப்பிச் செல்லும் பணக்காரர்கள்..!

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு கிட்டத்தட்ட 3,50,000-த்தினை எட்டியுள்ளது.இதன்காரனமாக,இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் தனியார் ஜெட் விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.இந்த காரணத்தினால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள்...
இந்தியா

இந்தியாவின் நிலை மனதை பதறவைக்கிறது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் உருக்கம்!

இந்தியாவில் தற்போதுள்ள சூழ்நிலை மனதை பதறவைக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் நேற்றைய தினத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய டெட்ரஸ் அதானோம்' இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை மனதை பதறவைக்கிறது. எங்களால் முடிந்த எல்லா உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தியாவிற்குத் தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்று கூறினார் மேலும்...
1 588 589 590 591 592 596
Page 590 of 596

Right Click & View Source is disabled.

error: Content is protected !!