செய்திகள்

செய்திகள்விளையாட்டு

நேற்று துபாயில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

துபாயில் தற்போது ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் நேற்றுவரை 51 பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று ஒரே நாளில் இரு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு தங்கப்பதக்கத்தை இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நேற்று நடந்த ஆண்களுக்கான 91 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற கஜகஸ்தானைச் சேர்ந்த வாசிலி லிவிட்டை வீழ்த்தித் தங்கப்பதக்கத்தைக்...
இந்தியாசெய்திகள்

லட்சத்தீவு வரைவு சட்டங்கள்; மக்களிடம் கருத்துக் கேட்கப்படும்: அமித் ஷா

லட்சத்தீவு தொடர்பான புதிய வரைவு சட்டங்கள், அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே அமலுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசமான லட்சத் தீவு நிர்வாகி பிரபுல் படேல் லட்சத்தீவு மேம்பாடு மற்றும் சமூக விரோத செயல்களுக்கு தடை விதிப்பது தொடர்பான இரு வரைவு சட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு...
இந்தியாசெய்திகள்

“இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை கூடாது” : உச்சநீதிமன்றம் அதிரடி!!

ஆந்திராவில் இரண்டு தனியார் டிவி சேனல்கள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை, அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ரகுராம கிருஷ்ணம் ராஜூ தொடர்ந்து விமர்சித்து வந்தார். கொரோனா சூழலை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முறையாக கையாளவில்லை என அவர் குற்றம்சாட்டினார். இதனையடுத்து அவர் கடந்த மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது...
செய்திகள்தமிழகம்

ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை : தமிழக அரசு அறிவிப்பு

ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்தாலும் எண்ணிக்கை அளவில் அதிகமாகவே உள்ளது. இதனால் பல மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாத நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் அனுமதி அளிப்பதால் எனக் கூறப்படுகிறது. இதையொட்டி கொரோனா சிகிச்சை முறைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக...
செய்திகள்தமிழகம்

சேலம் செவ்வாய்பேட்டையில் நேரக் கட்டுப்பாட்டுடன் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் திறப்பு

சேலம் செவ்வாய்பேட்டையில் நேரக் கட்டுப்பாட்டுடன் நேற்று மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் திறக்கப்பட்டது. இதனால், வழக்கமான நாட்களைபோல அங்கு பரபரப்பு நிலவியது. தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வாகனங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறு வியாபாரிகள் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று சிறு வாகனங்களில் காலை 7...
செய்திகள்தமிழகம்

“ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது, விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் அதிகமாகியது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.எனவே, கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை...
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் அட்டவணை குறித்த சூப்பர் அப்டேட்… பிசிசிஐ அதிகாரி சொன்ன தகவல்.. புதிய தேதிக்கு மாற்றம்!

ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்தும் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிக சம்பளம் பெறும் நம்பர்.1 கேப்டன்.. கோலி இல்ல - இவருக்கா இவ்ளோ சம்பளம்? இதுவரை 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடத்தப்படவேண்டியுள்ளது. இதற்காக 30 நாட்கள் கால இடைவெளிக்காக பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி...
செய்திகள்விளையாட்டு

அபுதாபி விமானத்தில் பயணிக்க 11 பாகிஸ்தான் கிரிக்கெட்டர்களுக்கு அனுமதி மறுப்பு – காரணம் என்ன?

பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக அபுதாபி செல்லவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது உள்ளிட்ட அணி வீரர்கள், நிர்வாகத்தினருக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பாணியில் பாகிஸ்தானில் 2016ம் ஆண்டு முதல் பிஎஸ்எல் கிரிக்கெட் தொடர் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. 6 அணிகள் கலந்து கொள்ளும் இத்தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் கொரோனா...
உலகம்செய்திகள்

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்புகிறது சீனா!

சீனாவின் புதிய விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்கள் அடுத்த மாதம் அனுப்பப்படவுள்ளனா். இத்தகவலை சீன விண்வெளி நிலைய திட்டத்தின் துணை தலைமை வடிவமைப்பாளா் யாங் லிவி தெரிவித்துள்ளாா். அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சா்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் இடம்பெறாத சீனா, தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்து வருகிறது. 'தியான்ஹே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதியானது கடந்த ஏப்....
உலகம்செய்திகள்

ஆஸ்கர் தேதி அறிவிப்பு!

94-வது ஆஸ்கர் விருது விழாவுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 25-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 2022-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 27...
1 555 556 557 558 559 583
Page 557 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!