செய்திகள்

இந்தியாசெய்திகள்

நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின்திட்டம் தொடக்கம்

நாட்டின் மிகப்பெரிய மிதவை சூரிய சக்தி ஒளிமின் திட்டத்தை ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம், சிம்ஹாத்ரி அனல்மின் நிலையத்தின் நீா்த்தேக்கத்தில் தேசிய அனல்மின் கழகம் உருவாக்கியுள்ளது. 25 மெகாவாட் திறன் கொண்ட இந்தத் திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. தேசிய அனல்மின் கழகத்தின் மண்டல நிா்வாக இயக்குநா் திரு சஞ்சய் மதன் இந்தத் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். நீா்த்தேக்கத்தில் சுமாா் 75 ஏக்கா் பரப்பளவில்,...
செய்திகள்தமிழகம்

ஒரு வழியாக தமிழகத்தில் பள்ளிகள் செப் 1 முதல் திறப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து, வரும் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி...
செய்திகள்தமிழகம்

நம்ம சென்னைக்கு வயசு 382! – சென்னை தினம் இன்று

சென்னை தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மாநகராட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதியை நினைவூட்டும் விதமாக, கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 382-வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினம் இதையொட்டி, சென்னை மாநகராட்சி நிர்வாகம் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்,...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் பதவிகளை பிடிக்க கடும் போட்டி- பாஜக நிர்வாகிகளை மாற்ற அண்ணாமலை தீவிர ஆலோசனை

தமிழக பாஜக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டுள்ளார். விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராக கடந்தஜூலை 8-ம் தேதி நியமிக்கப்பட்டார். பாஜக கட்சி விதிகளின்படி, மாநிலத் தலைவராக ஒருவர்நியமிக்கப்பட்டால் பொதுச் செயலாளர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர், செயலாளர்கள், அலுவலகச் செயலாளர் போன்ற மாநில நிர்வாகிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். பாஜக மாநிலத் தலைவர் பதவி என்பது...
செய்திகள்தமிழகம்

கோடநாடு வழக்கில் தொடர்பு இல்லாவிட்டால் இபிஎஸ், ஓபிஎஸ் அச்சப்படத் தேவையில்லை: விசிக தலைவர் திருமாவளவன் கருத்து

கோடநாடு வழக்கில் தொடர்பு இல்லாவிட்டால் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அச்சப்படத் தேவையில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்தார். திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும்மக்களவைத் தேர்தலுக்குள் வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டியது அவசியம். சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் 5 மாநில முதல்வர்கள், 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றது, அதற்கு அடித்தளம் அமைப்பதாக உள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸ் விடுதலை...
உலகம்உலகம்செய்திகள்

மலேசியா புதிய பிரதமராக துணை பிரதமர் சப்ரி தேர்வு

மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர் முகமது கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திடீரென பதவி விலகினார். இதையடுத்து, உள்துறை அமைச்சராக இருந்த மொகைதின் யாசின் தமது ஆதரவாளர்கள், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி பிரதமரானார். கூட்டணியில் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக சில தினங்களுக்கு முன்பு அவரும் பதவி விலகினார். இந்நிலையில், துணைப் பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூப்பை பிரதமர் வேட்பாளராக ஏற்க கூட்டணி கட்சிகள்...
உலகம்உலகம்செய்திகள்

அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 52 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்..!!!!

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட் நாட்டில் இருந்து 53 அகதிகளுடன் படகு ஒன்று அட்லாண்டிக் கடல் வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் நோக்கத்தோடு கடந்த வாரம் படகு ஒன்று புறப்பட்டது. அந்த படகு ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகளுக்கு 220 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்பெயின் கடற்படையினர் விபத்துக்குள்ளான படகு மூழ்கிய இடத்திற்கு...
செய்திகள்விளையாட்டு

மீண்டும் களமிறங்கப்போகும் பந்துவீச்சாளர்! சென்னை சூப்பர் கிங்ஸ் உற்சாகம்!

இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஜோஷ் ஹேசல்வுட் ஆனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறி வெளியேறினார். பின்னர் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேசன் பெஹ்ரான்டாஃப் மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் கொரோனா அதிகமான காரணத்தினால் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்பொழுது செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை மீதமுள்ள...
செய்திகள்விளையாட்டு

ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் : 5 பதக்கங்களுடன் டாப் 3 இடம்பிடித்த இந்திய மகளிர் அணி..!

சர்வதேச ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 16-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர், 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 18 முதல் 20 வயதுடைய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினர். இதில், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் ஃப்ரீ ஸ்டைல் மகளிர் மல்யுத்த போட்டிகள் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா சார்பில் பட்ரி(65 கிலோ),...
இந்தியாசெய்திகள்

2024 மக்களவை தேர்தல்தான் நமது இலக்கு; எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயலாற்றும் நேரம் வந்துவிட்டது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு

வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலே நமது இலக்கு. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக பொதுவான வியூகத்தை வகுப்பது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது போன்ற நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, நேற்று மாலைகாணொலி வாயிலான கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள்...
1 496 497 498 499 500 584
Page 498 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!