செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்கா்களை வெளியேற்றுதில் கவனம்: துணை அதிபா் கமலா ஹாரிஸ்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா்களையும், தலிபான்களின் தாக்குதல் அபாயத்தில் உள்ள அந்நாட்டு மக்களையும் வெளியேற்றுவதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் கூறினாா். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதால் நடந்த தவறு என்ன என்ற கேள்விகளால் நிலைமையை திசைதிருப்பக் கூடாது எனவும் அவா் தெரிவித்தாா். சிங்கப்பூா் வந்துள்ள அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ், அந்நாட்டு பிரதமா் லீ ஷின் லூங்குடன் கரோனா நிலவரம், இணைய பாதுகாப்பு, இருதரப்பு...
செய்திகள்விளையாட்டு

நெருக்கும் ஐபிஎல் போட்டிகள்.. துபாயில் தீவிர பயிற்சியில் தோனி, சிஎஸ்கே வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில நாட்களாக துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் செப்டம்பர் தொடங்கி அக்டோபர் 15 வரையில் 2021 ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அமீரகத்தில் தற்போது முகாமிட்டுள்ளனர். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட...
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் இன்று தொடக்கம்: 54 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு

ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு இன்று தொடங்குகிறது. செப். 5-ம் தேதி வரை நடைபெறும் இந்தவிளையாட்டில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 போ கால்பந்து, ஜூடோ, பாராகனோ, பளுதூக்குதல், படகு போட்டி, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ்,...
இந்தியாசெய்திகள்

நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அமல்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

நாட்டில் முதல் மாநிலமாக கர் நாடகாவில் நடப்பு கல்வி ஆண் டிலேயே தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அது தொடர்பான புதிய திட்டங் களை ம‌த்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்தார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண், தேசிய கல்வி...
இந்தியாசெய்திகள்

டெபிட் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு 16 இலக்க எண், காலாவதி தேதி உள்ளிட வேண்டியது கட்டாயம்: 2022 முதல் அமல் என ஆர்பிஐ அறிவிப்பு

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைனில் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி ஆன் லைன் வணிக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு தகவல் களைச் சேமிக்க கூடாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட அனைத்து இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் பிற ஆன்லைன் கட்டண தளங்களும் இதுவரை வாடிக்கையாளர்களின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களை தங்களுடைய...
செய்திகள்தமிழகம்

மணிப்பூர் ஆளுநராக நியமனம்: சங்கரமடத்தின் பீடாதிபதி விஜயேந்திரரிடம் ஆசிபெற்ற இல.கணேசன்

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன், காஞ்சிபுரம் வருகை தந்து சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார். பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மணிப்பூர் ஆளுநராக நியமித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் பதவியேற்புக்கு முன்பாக காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரரை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் இல.கணேசன். ஆசி பெற்றபோது, அவருடன் அவரின் சகோதரர் இல.கோபாலன் உடன் வந்திருந்தார்....
செய்திகள்தமிழகம்

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (ஆக.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக கடற்கரையை ஒட்டிநிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக 24-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான...
செய்திகள்தமிழகம்

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மீண்டும் தமிழகத்துக்கு பேருந்துகள் இயக்கம்

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நேற்று முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. கரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆந்திராவில ்இருந்து தமிழகம், கர்நாடக மாநிலங் களுக்கு 4 மாதங்களுக்குப் பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து திருப்பதி, கடப்பா, சித்தூர், விஜயவாடா, பலமனேர், குப்பம்,...
உலகம்உலகம்செய்திகள்

வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை: இலங்கையில் திட்டம்

இலங்கையில் வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி பத்திரம் வெளியிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். யானைகளை பாதுகாப்பதற்கான சரியான வர்த்தமானியோ அல்லது சுற்று நிருபமோ இதுவரை இருக்கவில்லை என அவர் கூறினார்....
உலகம்உலகம்செய்திகள்

பூமிக்கு ஆபத்து.. 94,000 கிமீ வேகத்தில் நெருங்கும் சிறுகோள்.!!!

4500 அடி குறுக்களவு கொண்ட சிறு கோள் ஒன்று பூமியை 94,000 கிமீ வேகத்தில் நெருங்கி வருவதாக நாசா கவலை தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு முதல் முதலில் கண்டறியப்பட்ட AJ193 எனும் சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 4500 அடி குறுக்களவு, 1.4 கிமீ அகலம் கொண்டதாக அந்த சிறுகோள் இருப்பதாகவும் இந்த நிகழ்வை பூமியில் இருந்து தொலைநோக்கி மூலம் கண்காணித்து வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது....
1 494 495 496 497 498 584
Page 496 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!