செய்திகள்

இந்தியா

பண்டிகைக்கால கூட்ட நெரிசல்களை தடுக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகைகள் காரணமாக மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைககள் அடுத்த சில மாதங்களில் வர உள்ள நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எனவே அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக பண்டிகைக்...
தமிழகம்

திடீர் கலவரம் : 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு!

கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், புதுச்சேரி கடல் பகுதியில் ஒருசில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். இதற்கு ஒருசில மீனவ பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நல்லவாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வீராம்பட்டினம் அருகே படகில் சென்று சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனால் சுருக்குமடி பயன்படுத்த தடை...
தமிழகம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்

மதுரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 1-ம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. மதுரையில் இதுவரை 14 ஆயிரத்து 896 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், மேலும் 2...
தமிழகம்

‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு!

இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ.317.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள் கட்டித்தரப்படும், குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை...
உலகம்

‘சிவப்பாய் மாறிய சாக்கடை நீர்…’ காபூல் தாக்குதலை பார்த்தவரின் மிரட்சி அனுபவம்!

ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தலிபான்களால் தாக்கப்படுவோம் என்ற பயத்தில், வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டபோது, ​​ஏறக்குறைய 10 மணிநேரம் விமான நிலையத்தின் அபே கேட் அருகே வரிசையில் நின்றிருந்ததாக அடையாளம் வெளியிட விரும்பாத நபர் கூறினார். அவர் அங்கு நிகழ்ந்த துயர சம்பவத்தை விவரிக்கிறார். "என் கால்களுக்கு அடியில் இருந்து யாரோ தரையை இழுத்தது போல் இருந்தது. ஒரு கணம் என் காதுகள் வெடித்ததாக எண்ணினேன். அதன்...
உலகம்

‘நான்கு கால் திமிங்கலங்கள்’ எகிப்தில் கண்டுபிடிப்பு!

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு கால் திமிங்கல இனம் அழிந்துபோன ஒரு திமிங்கல வகையினை சேர்ந்தது. இது 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திமிங்கலத்தின் புதைபடிவங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த புதைவடிவம் எகிப்தின் மேற்கு பாலைவனப்பகுதிகளின் 'ஃபேம் டிப்ரஷனின்' ஈசீன் பாறைகளின் இடுக்கில் கிடைத்துள்ளது. இந்த ஈசீன் பாறைகள் ஒரு காலத்தில் கடலால் மூடப்பட்ட பகுதியாக இருந்திருக்கிறது. திமிங்கலங்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் ஏராளமான ஆதாரங்கள் இங்கே இதுவரை...
இந்தியா

முறை சாரா தொழிலாளர்களுக்கு உதவ புதிய இணையதளம் இ-ஷ்ரம் தொடக்கம்

நாட்டில் உள்ள முறை சாரா பணியாளர்களுக்கு உதவ இ-ஷ்ரம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் முறை சாரா பணியாளர்கள் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கென தனி யாக 12 இலக்க எண் அடங்கிய அட்டை வழங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார். கட்டிட பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த பணியாளர்கள், தெருவோர பணியாளர்கள்,...
இந்தியா

ஒரே நாளில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திய இந்தியா! பிரதமர் மோடி, அமித்ஷா பாராட்டு !

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கடந்த 17ம் தேதி 88 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இந்த சாதனை தற்போது நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 1 கோடி மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒரே நாளில் ஒரு கோடிக்கும்...
தமிழகம்

சென்னையை சுற்றியுள்ள பரனூர் உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யப்படுவதை நிறுத்த நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னையைச் சுற்றியுள்ள 5 இடங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சுங்கச்சாவடிகளில் வசூலை நிறுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திருவையாறு தொகுதி திமுக உறுப்பினர் துரைசந்திரசேகர் பேசும்போது, ''தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடந்து வருவதில் அவமானம் ஏற்படுகிறது. வாகனத்தில் எம்எல்ஏ இருக்கிறாரா, பாஸ் உள்ளதா என்பதை ஆய்வு செய்கின்றனர். நீண்ட நேரம்...
தமிழகம்

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலான மழை

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பரவலாக மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரில் கனமழைக்கு...
1 491 492 493 494 495 584
Page 493 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!