செய்திகள்

தமிழகம்

தமிழகத்தில் தடை: இன்று முதல் அமல்!

சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையிலும் சுற்றுலா தலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தடை என தமிழக அரசு அறிவித்திருந்தது இன்று முதல் அமல் படுத்தப் படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன கடந்த சில நாட்களாக தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்றும் மூன்றாவது அறையை தடுப்பதற்காக தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன அதன்படி சென்னை மெரினா கடற்கரை...
உலகம்

‘எங்க ஸ்டைலில் விரட்டுவோம்’ 30 லட்சம் தடுப்பூசியை நிராகரித்தார் கிம் ஜாங்

அதிரடி முடிவுகளுக்கும், சர்ச்சையான நடவடிக்கைகளுக்கும் சொந்தக்காரர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையில், வடகொரியாவில் மட்டும் யாருக்குமே தொற்று இல்லை என குண்டை தூக்கி போட்டு ஆச்சரியமூட்டியவர். இதுவரை வடகொரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டதா இல்லையா என்பதே மர்மமாக உள்ளது. தற்போது, எல்லா நாடுகளும் கொரோனா தடுப்பூசி போதாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கிம் ஜாங் உன் தனது நாட்டிற்கு கிடைத்த 30 லட்சம்...
உலகம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஷ்ரிங்லா சந்திப்பு

அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், இணை அமைச்சா் செயலா் வெண்டிட ஷொமன் ஆகியோரை சந்தித்து இரு நாட்டு உறவு, ஆப்கானிஸ்தான் நிலவரம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு முழுமையாக திரும்பப் பெறப்பட்ட பிறகு, அமெரிக்க-இந்திய உயா் அதிகாரிகளிடையே நடைபெறும் முதல் நேரடி ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். வாஷிங்டனில் உள்ள...
இந்தியா

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கமிட்டி அமைத்தது காங்கிரஸ்

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களை ஆய்வு செய்ய, ஏழு உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை காங்கிரஸ் தலைவர் சோனியா அமைத்துள்ளார். இதில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி, நாடு முழுதும் பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களை ஆய்வு செய்ய, காங்கிரசில் ஏழு உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்றை அந்த கட்சி தலைவர் சோனியா அமைத்துஉள்ளார்....
இந்தியா

நாடு முழுவதும் 68 உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு – கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 4 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக் ஆகியோர் நீதிபதிகளாகின்றனர். நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் குழு, கடந்த ஒன்றாம் தேதி கூடி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியது. இதில் 112 பேரின்...
தமிழகம்

அரசு மற்றும் தனியார் நிலங்களில் ரூ.50 கோடியில் நாட்டு மரக்கன்று நடும் திட்டம்: சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.50 கோடி செலவில் மண் சார்ந்த நாட்டு மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்தார். சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில்அளித்து அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், எக்காரணம் கொண்டும்தொழிற்சாலை கழிவுநீரை கடலிலோ, ஆற்றிலோ கலக்கவிடக் கூடாது என்று ஆலை உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈரோடு,...
தமிழகம்

எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் இல்லம் மற்றும் அலுவலகம் என சுமார் 60 இடங்களில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். வேலுமணியின் இல்லம், அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில்குமார், பொறியாளர் சந்திரபிரகாஷ், மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில்...
உலகம்

பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளர் ரஜினி கௌல் காலமானார்

பிபிசியின் முதல் ஹிந்தி செய்தி வாசிப்பாளரான ரஜினி கௌல் நேற்று முன்தினம் (ஆக-31) தன்னுடைய 93-வது வயதில் பாகிஸ்தானின் பரிதாபாத்தில் காலமானார். பெஷாவரில் பிறந்த ரஜினி கௌல் தில்லியில் ஆல் இந்தியா ரேடியோவிலும் பின் 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' செய்தி நிறுவனத்திலும் பணியாற்றிய பின் லண்டனில் உள்ள பிபிசி செய்தியின் தலைமை அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார். அதற்கடுத்து 1961 ஆம் ஆண்டு முதல் பிபிசியில் ஹிந்தி மொழி செய்தி வாசிப்பாளராக...
உலகம்

இடா புயல்: நியூயார்க்கில் மழை வெள்ளத்தால் 7 பேர் பலி..!

இடா புயல் காரணமாக நியூயார்க்கில் நேற்று இரவு பெய்த கனமழை காரணத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு...
உலகம்

ஈரானைப் போன்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி : தாலிபான்கள் நடவடிக்கை

ஈரானைப் போன்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆப்கனின் உச்சபட்ச தலைவராக ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆப்கானிஸ்தானை விட்டு நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர், ஆட்சி அமைக்க தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஈரான் நாட்டில் இருப்பதுபோன்று ஆப்கானிஸ்தானிலும் அரசு அமைக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, நாட்டின் உச்சபட்ச தலைவர் நியமிக்கப்பட்டு, அவர் அரசியல் மற்றும் மதரீதியான...
1 487 488 489 490 491 584
Page 489 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!