தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் இரவு 3.30 மணி வரை அதிகபட்சமாக எம்.ஆர்.சி நகரில் 8.2 செ.மீ மழை பொழிந்துள்ளது. தரமணி - 7.5 செ.மீ, பெருங்குடி - 7.3 செ.மீ, அண்ணா நகர் - 7.3 செ.மீ, நந்தனத்தில் 6.6 செ.மீ மழை பெய்துள்ளது. மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், பெருங்குடி, நந்தனம், சென்ட்ரல், கிண்டியில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை உள்பட தமிழகத்தின்...
தமிழகம்

அதிகபட்சமாக 3,203 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல்: மின் வாரியம் புதிய சாதனை

மின்வாரியம் இதுவரை இல்லாத அளவாக மிக அதிகபட்சமாக 3,203 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் கிடைத்து வருகிறது. அத்துடன், மத்திய அரசும் சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க மாநில அரசுகளை ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால், பல நிறுவனங்கள் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க ஆர்வம் செலுத்தி வருகின்றன. தற்போது, தமிழகத்தில் 4,200 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களை தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ளன. இதுதவிர, தனிநபர்கள் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளிலும் சூரியத் தகடுகளை அமைத்து மின்னுற்பத்தி செய்கின்றனர். தனியார் சூரியசக்தி மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு மின்வாரியம் கொள்முதல் செய்து வருகிறது. மழைக் காலங்களை தவிர்த்து,ஏனைய நாட்களில் நாள்தோறும்...
தமிழகம்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்: உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கட்சி அலுவலகங்கள், வீடுகள் முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதார பாதிப்பு, தனியார்மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று காலை 10 மணி அளவில் கட்சி அலுவலகங்கள்,...
தமிழகம்

22 மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் வைரமுத்து நூல்!

கவியரசு வைரமுத்து எழுதிய நூலொன்று 22 மொழிகளில் மொழிபெயர்க்க வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது கவியரசு வைரமுத்து எழுதிய நூல்களில் ஒன்று கள்ளிக்காட்டு இதிகாசம். இந்த நூல் தமிழில் எழுதப்பட்டது என்பதும் இந்த நூல் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூல் தற்போது 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு நூல் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கவியரசு வைரமுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகம்

கோயில்களில் இன்று முதல் இலையில் அன்னதானம் – தமிழக அரசு

தமிழகத்தில் அன்னதானம் வழங்கப்படும் அனைத்து கோயில்களிலும் இன்று முதல் இலையில் உணவு பரிமாறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்களில் இலையில் உணவு பரிமாறப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்னதானம் வழங்கப்படும் அனைத்து கோயில்களில் உள்ள அன்னதானக் கூடங்களில் இன்று முதல் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்களுக்கு இலையில் உணவு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை இலையிலும், கோயில்கள் மூடியிருக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொட்டலங்களில் கட்டியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று காலை மற்றும் மாலை நேரங்களில்...
தமிழகம்

மாணவர்களுடன் இனைந்து பசுமை விழிப்புணர்வில் ஈடுபட்ட “திருவொற்றியூர்” காவலர்கள்

சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான வெள்ளையன் செட்டியார் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று திருவொற்றியூர்...
தமிழகம்

இன்று தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பதவியேற்பு.!!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர் என் ரவி தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆர் என் ரவி 1976 ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்துள்ளர். இதையடுத்து, மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு நாகலாந்து மாநில ஆளுநராக 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தற்போது தமிழகத்தில் 15வது ஆளுநராக ஆர் என் ரவி இன்று பதவி ஏற்க உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது. ஆர் என் ரவிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி பதவி பிரமாணம்...
தமிழகம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் விசாரணை செப்.24-க்கு தள்ளிவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு புகார் விசாரணையை செப்.24-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணனும், வழக்குப்பதிவு செய்வதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர். இதனால் இந்த வழக்கு விசாரணை 3-வது நீதிபதியான எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்து வருகிறது. ராஜேந்திரபாலாஜி தரப்பில், ''உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மாறுபட்ட...
தமிழகம்

பெரியாரின் 143வது பிறந்தநாள் : இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

இளம் தலைமுறையினரோடு காலம் கடந்து வாழும் தந்தை பெரியாரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை 'சமூக நீதி நாள்' ஆகக் கொண்டாடுவோம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரியாரின் 143ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடர் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலையிலுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணியளவில், மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும், தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் விதமாக முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும்....
1 508 509 510 511 512 544
Page 510 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!