சர்ச்சைக்குரிய பதிவு: யூடியூபர் மாரிதாஸ் கைது
குன்னுார் அருகே ெஹலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறந்த சம்பவத்தில் தி.மு.க.வை விமர்சித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த பா.ஜ. ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் 40 மதுரையில் கைது செய்யப்பட்டார்.மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரிய காலனியில் வசிக்கும் மாரிதாஸ் அவ்வப் போது தி.மு.க. அரசை விமர்சித்து டிவிட்டரிலும் யூடியூபிலும் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார். நேற்று முன்தினம் குன்னுார் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மனைவி உட்பட 13 ராணுவ வீரர்கள் இறந்தனர். இதுதொடர்பாக மாரிதாஸ் டிவிட்டரில் தி.மு.க.ஆட்சி குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இது பிரிவினைவாதத்திற்கு எதிரானது என்பதால் மதுரை போலீசார் தாங்களாகவே முன்வந்து மாரிதாஸ் மீது சைபர் கிரைம் சட்டப்பிரிவு 153 ஏ 505(2)ன்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 153 ஏ பிரிவு என்பது...
