தமிழகம்

தமிழகம்

தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் மையங்களில் 3-ம் கட்ட சிறப்பு முகாம்: ஒரே நாளில் 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 24.85 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டுதடுப்பூசிகள் போடப்படுகின்றன. கரோனா3-வது அலை எச்சரிக்கை இருப்பதாலும்,கேரளாவில் தினசரி தொற்று அதிகரித்துள்ளதாலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. கடந்த 12-ம் தேதி 40 ஆயிரம் மையங்களில் நடந்த முதல் சிறப்பு முகாமில் 28. 91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக கடந்த 19-ம் தேதி 20 ஆயிரம் மையங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் 16.41 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள்,...
தமிழகம்

ஜி.எஸ்.டி கவுன்சில் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டி. கவுன்சில் சீர்த்திருதக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இடம்பெற்றுள்ளார். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று மாநில சுயாட்சிக் கோட்பாட்டை அவர் வலியுறுத்தியது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜி.எஸ்.டி. கவுன்சில் தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. கடந்த 17-ந் தேதி லக்னோவில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தம்மால் பங்கேற்க இயலவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதனை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்தது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அண்ணாமலை ஒரு...
தமிழகம்

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்னாமலை, திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வருகின்ற 26-ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி...
தமிழகம்

திருப்பதியில் சர்வ தரிசன டிக்கெட் கிடைக்காததால் ஆர்ப்பாட்டம்: தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் 15 பேர் கைது

திருப்பதியில் சர்வ தரிசன டிக்கெட் கிடைக்காததால் ஆர்ப்பாட்டம் செய்த தமிழக பக்தர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை இரவு முதல் தினந்தோறும் 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறையில் வழங்கப் பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்கு தினந்தோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தபடி இருந்தனர். இதனால் கூட்டம் வருவதை தவிர்ப்பதற்காக தேவஸ்தான அதிகாரிகள் அடுத்தடுத்த நாட் களுக்கு உண்டான டிக்கெட்களை தொடர்ந்து வழங்கி வந்தனர். நேரடியாக வந்து டிக்கெட் பெறுவதற்காக கூட்டம் சேருவதைத் தவிர்க்க ஆன்லைனில் தினந்தோறும் 8 ஆயிரம் டிக்கெட்டுகள் என இலவச தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு நாளை 26-ம்தேதி முதல் தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுவதாக...
தமிழகம்

”பள்ளிகள் திறந்த உடன் சத்துணவு”- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது. இத்தொற்று பரவலால் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தால் இரண்டாம் அலை பரவிவருகிறது. இதனால் பள்ளிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்ட்து. பின்னர் செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அடுத்து, 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. இந்நிலையில்,. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில். பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவுத் திட்டத்தை துவங்க வேண்டுமெனக் கூறியுள்ளது....
தமிழகம்

தயாரிப்பாளர், இயக்குநர் கேயாரின் மனைவி திருமதி இந்திரா காலமானார்

பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான திரு கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார் சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 24, 2021) மாலை 4.45 மணிக்கு அவர் காலமானார். அவரது வயது 67. இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர் அவரது இறுதி சடங்கு நாளை (செப்டம்பர் 25, 2021) மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும். முகவரி: பழைய எண் 11, புதிய எண் 14, முதல் பிரதான சாலை, சீதம்மாள் எக்ஸ்டென்ஷன், எஸ் இ ஈ டி கல்லூரி அருகில், தேனாம்பேட்டை, சென்னை....
தமிழகம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 1,000 செவிலியர்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஆர்.இந்திரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும், செவிலியர்களின் கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. கரோனா பாதிப்பின்போதும் செவிலியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். அதேபோல, தடுப்பூசி போடும் பணியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதிலும் செவிலியர்களின் பணி முக்கியமானது. பல மாதங்களாக காலியாக இருக்கும் செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மருத்துவம், சுகாதாரப் பணிகள் தவிர, மற்ற பணிகளை செய்யுமாறு சுகாதார செவிலியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அரசு நிர்ணயம் செய்துள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம்....
தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் குறைவான இடங்கள் ஒதுக்கீடு: திமுக மீது காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு மிக குறைவான இடங்களை திமுக ஒதுக்கியுள்ளதால், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. தமிழகத்தில் விடுபட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6, 9-ம்தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய 9 கட்சிகள் உள்ளன. கூட்டணி கட்சிகளிடம் பேசி...
தமிழகம்

அரசு அதிரடி.. ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழக அரசில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் நிதித்துறைத் துணைச் செயலராக பிரதிக் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை இணைச் செயலராக ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மற்றும் மறுவாழ்வு துறையின் சிறப்புச் செயலராக கலையரசி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியராக மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்....
தமிழகம்

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்…! இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், தமிழகத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், புதிய மின் இணைப்புக்காக, தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் இன்று கூறப்படுகிறது....
1 507 508 509 510 511 544
Page 509 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!