தமிழகம்

தமிழகம்

இனி குப்பை கொட்டினால் 5,000 ரூபாய் வரை அபராதம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிப்பதற்காக பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனத்திலிருந்து குப்பைகளை எறிபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தரம் பிரிக்கப்படாத குப்பைகளை கொட்டுபவர்களுக்கு 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை ஒரு டன் அளவுக்கு பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தோட்டக்கழிவுகள் மற்றும் மரக்கழிவுகளை பொது இடங்களில்...
தமிழகம்

புதுச்சேரி மாநிலத்திற்குள் நுழைய சீமானுக்கு தடை!!

சீமான் புதுச்சேரி மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என மகிளா காங்கிரஸார் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் . நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தை பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார் . சீமான் காங்கிரஸ் குறித்து பேசுவதை நிறுத்தவில்லை என்றால் கடும் இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பொருந்தகை எச்சரிக்கை விடுத்திருந்தார் . தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே . எஸ் . அழகிரி சீமான் ஒரு சமூக விரோதி என்றும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்என கூறியிருந்தார். இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொது செயலாளர் சூசைராஜ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் புதுச்சேரியில்...
தமிழகம்

தனுஷ்கோடியில் நவீன கலங்கரை விளக்கப் பணிகள் தீவிரம்: இலங்கையின் தலைமன்னார் வரை ஒளி தெரியும்

  ராமேசுவரம் அருகே தனுஷ் கோடியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் மூலம் புதிய கலங்கரை விளக்கம் நவீன ரேடார் கருவி வசதியுடன் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பழவேற்காடு தொடங்கி, சென்னை மெரினா, மாமல்லபுரம், பாண்டிச்சேரி, பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், கள்ளிமேடு, கோடியக்கரை, அம்மாபட்டினம், பாசிப்பட்டினம், பாம்பன், ராமேசுவரம், கீழக்கரை, பாண்டியன் தீவு (தூத்துக்குடி மாவட்டம்), மணப்பாடு, கன்னியா குமரி, முட்டம் ஆகிய இடங்களில் கலங்கரை விளக்கங்கள் உள்ளன. புயலால் அழிந்து போன தனுஷ்கோடியை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், இந்திய எல்லைப் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்கரைப் பகுதிகளை கண்காணிப்பதற்காகவும் தனுஷ் கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக்...
தமிழகம்

ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் உதகையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறை, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் தசரா பண்டிகையையொட்டி தென்மாநிலங்களில் 10 நாட்கள் வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து உதகையில் திரண்டு வருகின்றனர். அரசினர் தாவரவியல் பூங்காவை கடந்த மூன்று நாட்களில் சுமார் 20,000 சுற்றுலா பயணிகள் கண்டுகளித்துள்ளனர். நேற்று உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 9,668 பேரும், அரசினர் ரோஜா பூங்காவுக்கு 4,927 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 792 பேரும், மரவியல் பூங்காவுக்கு 195 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 3,440 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 1,005 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 302 பேரும் வந்திருந்தனர். இன்று மற்றும் நாளை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை, மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
தமிழகம்

உள்ளாட்சி தேர்தல் வெற்றி மக்கள் அளித்த நற்சான்று: வைகோ

'ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி; ஆட்சிக்கு தமிழக மக்கள் அளித்துள்ள நற்சான்று' என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். அவரது அறிக்கை: நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 138 இடங்களையும்; 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 1021 இடங்களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் கடந்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய அகரம் எழுதினர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரித்திர வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு நன்றி. ஸ்டாலினின் பொற்கால ஆட்சி தொடர வாழ்த்துக்கள்.  ...
தமிழகம்

விஜயதசமி நாளான இன்று முதல்.. ஊரடங்கில் கூடுதல் தளர்வு.. வார இறுதி நாட்களில் திறக்கப்பட்ட கோவில்கள்

இன்று முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறந்து பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் வெள்ளிக்கிழமையான இன்று காலை முதல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நடை திறக்கப்பட்டு உள்ளது. இதுவரை, சுமார் இரண்டரை மாதங்களாக, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. எந்த ஒரு வழிபாட்டுத் தலத்திற்கும் இதுதான் விதி முறையாக இருந்தது. கொரோனா நோய் பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இந்த நாட்களில் வழிபாட்டு தலங்களை மூடி வைப்பது என்பது தமிழக அரசின் முடிவாக இருந்தது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி.. தமிழக அரசு உத்தரவு! இந்த நிலையில் வார இறுதி...
தமிழகம்

தமிழக அரசு அதிரடி! ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!!

பண்டிகை காலங்களையொட்டி, கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறைப் பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை செய்துள்ளது . இது தொடர்பாக , மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் , தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது . கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி , ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . ஆயுதப்பூஜை , சரஸ்வதி பூஜை போன்ற விழாக் காலங்களையொட்டி , மக்கள் பெரிதளவில் சொந்த ஊர்களுக்கு செல்லும்போது , ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணத்தை வசூலிக்க வாய்ப்பிருப்பதால் , தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சோதனைகளை மேற்கொள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ,...
தமிழகம்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டடுக்கு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும்: சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தகவல்

ரூ.5,965 கோடி செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் பெரிய துறைமுகங்களுக்கு இணைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, பிரதமர் மோடி 'கதி சக்தி' என்ற திட்டத்தை இன்று (நேற்று) தொடங்கி வைத்துள்ளார். சாலை, இருப்புப் பாதை, துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டம் இதுவாகும். 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை துறைமுகத்தின் இணைப்புக் கட்டமைப்பு வசதிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளில் ரூ.779 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில், துறைமுக சாலைகள் இணைப்புத் திட்டத்துக்காக ரூ.600 கோடி, கடலோர சாலைப் போக்குவரத்து வசதிக்காக ரூ.66 கோடி, கடலோர...
தமிழகம்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

1965-ம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். 'வெண்ணிற ஆடை' படத்தில் டாக்டராக நடித்த இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. 200-க்கும் படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீகாந்த் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றார். சுமார் 50 படங்களில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த். எம்.ஜி.ஆருடன் இணைந்து அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ராஜா வெங்கட்ராமன் என்ற தனது பெயரை, சினிமாவிற்காக ஸ்ரீகாந்த் என மாற்றிக் கொண்டவர். ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிற ஆடை படத்தில் தான் இவரும் அறிமுகமானார் என்பதால், இவர் ஜெயலலிதாவிற்கும் மிக நெருங்கிய நண்பர் ஆவார். வெண்ணிற ஆடை, நாணல், ராஜபார்ட் ரங்கதுரை, அன்புத்தங்கை, வைரம், பைரவி, தங்கப்பதக்கம், நூற்றுக்கு நூறு,...
தமிழகம்

விஜயதசமிக்கு கோவில்கள் திறப்பா? முதலமைச்சர் இன்று ஆலோசனை!

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை குறைந்து வருவதை தொடர்ந்து நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனிடையே, பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால், வியாபாரிகள்,பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை வழங்குவதா அல்லது இதே நிலையை தொடர்வதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரம், வருவாய், பள்ளிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். பள்ளிகள் திறக்கப்படுவதால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய...
1 503 504 505 506 507 544
Page 505 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!