பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார் !!
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், நாகேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் (78) கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்மபக் கால கட்டத்தில் மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் நாடக்குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வாழ்க்கையை துவங்கினார் திலக். அதை தொடர்ந்து 1981-ம் ஆண்டு வெளியான 'கல்தூண்' என்கிற படத்தில் சிவாஜியின் மகனாக நடித்து தன்னுடைய திரைவாழ்க்கையை துவங்கினார். அன்று முதல் இவரை சினிமாவில் பலரும் 'கல்தூண்' திலக் என்றே அழைக்க தொடங்கினார். அந்த படத்தை தொடர்ந்து 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது', 'பேர் சொல்லும் ஒரு பிள்ளை', 'வெள்ளிக்கிழமை விரதம்' போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்தார். தமிழ் சினிமாவில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கல்தூண் திலக், பெரும்பாலும் வில்லன் வேடங்களையே ஏற்று நடித்தார்....