விரைவில் வெளியாகிறது தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தகவல்
தமிழகத்துக்கான மாநில கல்விக்கொள்கை விரைவில் வெளியாகும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 1,000 பழங்குடி மர இனங்களின் கன்றுகளை நடும் விழா நேற்று நடைபெற்றது. கிண்டி ரோட்டரி கிளப் மற்றும் எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு மரக்கன்றை நட்டார். அப்போது மாணவர்களிடையே அவர் பேசியதாவது: மாநிலக் கல்லூரியில் இடம் கிடைக்காதா என நான் ஏங்கியது உண்டு. இந்திய அளவில் சிறப்புமிக்க கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் பலரும் ஆர்வமாக உள்ளனர். கல்வியைத் தாண்டி விளையாட்டு, சமூகப் பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். கல்லூரியில் தற்போது 1,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. ஆனால், இங்குப் படிக்கும் 5 ஆயிரம் மாணவர்கள், ஒவ்வொருவரும்...
